டுபாயில் உள்ள வைத்தியசாலையில் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்த பெண் ஒருவரைப் பொலிசார் கைதுசெய்துள்ளனர். திருமணத்திற்கு முன்னதாக உடலுறவில் ஈடுபட்டு குழந்தையைப் பெற்றதாகப் பொலிசார் வழக்குப் பதிவுசெய்து அவரை நீதிமன்றில் நிறுத்தியுள்ளனர். 35 வயதான மேற்படி பெண், லத்தீபா வைத்தியசாலையில் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றார். அவரது கணவனுக்கு
29 வயது ஆகிறது. இவர்கள் இருவரும் சுமார் 5 வருடங்களுக்கு முன்னரே திருமணம் புரிந்துள்ளனர். இருப்பினும் இதனைப் பொலிசார் நம்பத் தயார் இல்லை என்ற நிலை தோன்றியதை அடுத்து, அவர்கள் தமது திருமண சான்றிதழை வழங்கியுள்ளனர்.
இதனை ஏற்க்க பொலிசார் மறுத்துள்ளனர். னினும் அவர்களின் திருமண உறவை உறுதிப்படுத்துவதற்கு அது போதுமானதல்ல எனவும் மூலப்பிரதிய அல்லது உறுதிப்படுத்தப்பட்ட பிரதியொன்று வேண்டுமெனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இத்தகைய சான்றை வழங்க முடியாத நிலையில், திருமணத்திற்கு புறம்பாக பாலியல் உறவு கொண்டிருந்த குற்றச்சாட்டில் அவ்விருவரும் கைது செய்யப்பட்டனர். 'இப்பெண் எனது மனைவி. எமக்கு ஒரு பிள்ளை உண்டு. இந்த பெண் குழந்தையும் என்னுடையதுதான்' என அக்குழந்தையின் தந்தை விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தார். தாம் திருமணம் செய்து மூன்று வருடங்களின் பின், 2010 ஆம் ஆண்டு தனது மனைவி தமது குழந்தையை இலங்கையில் விட்டுவிட்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வந்ததாக அவர்கூறினார்.
தாம் சார்ஜாவிலுள்ள வீடொன்றில் பணியாற்றியதாகவும் ஆனால் தனக்கு சம்பளம் வழங்கப்படாததால் 6 மாதங்களின்பின் அங்கிருந்து வெளியேறியதாகவும் அப்பெண் கூறியுள்ளார். மேற்படி ஆணும் பெண்ணும் சிறிய அறையொன்றில் வசித்தாகவும் அவர்கள், மீண்டும் மீண்டும் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் வழக்குத்தொடுநர் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது அனுசரணையாளரிடமிருந்து தலைமறைவானமை மற்றும் விஸா காலாவதியான பின் நாட்டில் தங்கியிருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளும் அப்பெண் மீது சுமத்தப்பட்டுள்ளது. இவ்விரு இவ்விடயங்களிலும் தான் குற்றவாளி என ஏற்றுக்கொண்டுள்ள அப்பெண், தனது கணவருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட விவகாரத்தில் குற்றவாளி அல்ல எனக் கூறியுள்ளார்.
இவ்வழக்கை வைத்து பார்க்கும்போது, பணம் கொடுக்காமல் ஏமாற்றிய அணுசரணையாளர் தான் பொலிசாரிடம் புகார்கொடுத்து இவர்கள் இருவரையும் வேண்டும் என்றே மாட்டிவிட்டிருப்பர் என நம்பத் தோன்றுகின்றது.
0 கருத்து:
கருத்துரையிடுக