புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திருச்சி அருகேயுள்ள சமயநல்லூர் மெச்சிகுளத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி மீனாட்சி. இவர்களது மகள் நர்மதா (வயது 17). இவர்கள் கோவையை அடுத்த அன்னூர் அருகேயுள்ள மைல்கல் பஸ் நிறுத்தம் அருகே வசித்து வருகின்றனர்.


மீனாட்சி அந்த பகுதியில் உள்ள மில்லுக்கு வேலைக்கு சென்று வருகிறார். நர்மதா வேலைக்கு செல்லவில்லை. வீட்டில் சமையல் வேலையை கவனித்து வந்தார். இந்த நிலையில் மீனாட்சியுடன் மில்லில் வேலைபார்க்கும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் என்ற ராகேஷ்குமார்(17) அடிக்கடி மீனாட்சி வீட்டுக்கு வந்து சென்றார். அப்போது அவருக்கும், நர்மதாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

மீனாட்சி வேலைக்கு சென்ற பின்னர் அவரது வீட்டுக்கு வரும் ராஜேஷ் தனது காதலியிடம் அன்பாக பேசினார். ‘உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று ஆசை வார்த்தை கூறினார். இதனை உண்மை என்று நம்பிய நர்மதா ராஜேசுடன் நெருங்கி பழகினார்.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ராஜேஷ் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நர்மதாவை நிர்வாணமாக்கி ரசித்திருக்கிறார். மேலும் உல்லாசமாக இருந்தாகவும் தெரிகிறது.

காதலன் மீது கொண்ட மயக்கத்தில் நர்மதா அவரது பெயரை கையில் கம்பியால் சூடுபோட்டு வைத்துள்ளார். இதை அறிந்த மீனாட்சி அதிர்ச்சி அடைந்தார். எனது மகளை திருமணம் செய்து கொள் என்று ராஜேசிடம் கூறியிருக்கிறார். அவர் மறுத்துவிடவே துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் அறிவுறுத்தலின் பேரில் நர்மதாவை ராஜேஷ் திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஊருக்கு சென்று வருகிறேன் என்று கூறிச்சென்ற ராஜேஷ் அதன் பின்னர் திரும்பி வரவே இல்லை. அதிர்ச்சி அடைந்த மீனாட்சி தனது மகளை அழைத்துக் கொண்டு ஒடிசா சென்றார். ராஜேசை சந்தித்து ‘ஏன் ஊருக்கு திரும்பி வரவில்லை?’ என்று கேட்டார். அதற்கு அவர் ரூ.2 லட்சம் தந்தால் தான் நர்மதாவுடன் வாழ்வேன் என்று கூறிவிட்டார்.

இதைத்தொடர்ந்து பலகோடா போலீசில் புகார் செய்தனர். போலீசார் சமரசம் பேசியும் ராஜேஷ் மறுத்து விட்டார். எனவே போலீசார் அவரை கைது செய்தனர். ஏமாற்றத்துடன் ஊர் திரும்பிய நர்மதா இன்று காலை தனது தாயாருடன் கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

கலெக்டர் கருணாகரனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் ]’எனது கணவரை என்னுடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top