குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டம், கிரியாதர் நகர், பச்சேகான் சாலையில் உள்ள ஒரு வீட்டில் 19 வயது இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று, பெற்றோர் வெளியூர் சென்றுவிட, இளம் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
நள்ளிரவில் கதவு உடைக்கப்படும் சத்தம்கேட்டு, தூக்கத்தில் இருந்து அந்தப்பெண் எழுந்தார். அவர் உஷாராவதற்குள் 3 இளைஞர்கள் வீட்டுக்குள் புகுந்தனர். கத்தியை காட்டி சத்தம் போடக்கூடாது என்று அவரை மிரட்டினர். பின்னர் அந்த இளம் பெண்ணை ஒரு அறையில் தள்ளி, 3 பேரும் மாறிமாறி கற்பழித்தனர். விடியும்வரை அந்த கும்பல் அவரை கற்பழித்தது. இதில் அவர் மயக்கம் அடைந்தார்.
விடிந்ததும் அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது. காலையில் வீட்டுக்கு வந்த உறவினர்கள், அலங்கோலமான நிலையில் மயங்கி கிடந்த அவரை அருகில் உள்ள கரியாதார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கற்பழிக்கப்பட்ட இளம் பெண்ணின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால், பாவ்நகர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவல் அறிந்து அங்கு சென்ற பாவ்நகர் போலீசார், சுயநினைவு திரும்பும் வரை காத்திருந்து, அவரிடம் இருந்து புகார் வாங்கினர்.
அந்த புகாரை கரியாதர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். புகாரில் தன்னை கரியாதரைச் சேர்ந்த தஷ்ரத் பட்டேல், சுரா வெல்ஜி, அனில் பிராமின் ஆகிய 3 இளைஞர்கள் கற்பழித்தனர் என்று அந்த இளம்பெண் குறிப்பிட்டு உள்ளார். 3 இளைஞர்கள் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் கரியாதர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 3 இளைஞர்களும் தலைமறைவாகிவிட்டனர்.
அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கொல்கத்தாவில் பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொல்கத்தாவைச் சேர்ந்த 37 வயது தனியார் நிறுவன பெண் ஊழியர் ஒருவர் அங்குள்ள ‘நைட் கிளப்’புக்குச் சென்றார். நண்பர்களுடன் சேர்ந்து நள்ளிரவு வரை மது அருந்தினார். பின்னர், நண்பர் கள் சென்று விட அவர் மட்டும் கிளப்பில் இருந்தார். அப்போது அவரிடம் அறிமுகமான இளைஞர்கள் சிலர், தங்களது காரில் வீட்டில் கொண்டு விடுவதாக கூறினர்.
தயங்கியபடி அவர்களுடன் காரில் சென்றார். கார் அங்குள்ள மைதானத் துக்கு சென்றது,. கார் மைதானத்தை சுற்றிக் கொண்டே இருக்க, அந்த பெண்ணை 5 இளைஞர்கள் கற்பழித்தனர். பின்னர் அவரை சாலையோரம் போட்டு விட்டு சென்றுவிட்டனர். மறுநாள் காலையில் மயக்கம் தெளிந்த அந்தப் பெண், கொல்கத்தா பார்க் நகர போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
நைட் கிளப்பில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆராய்ந்தனர். அதில் கற்பழிக்கப்பட்ட பெண்ணுடன் கிளப்பில் இருந்து வெளியேறும் இளைஞர்கள் காமிராவில் பதிவாகி இருந்தனர். அதை வைத்து, சுமித் பஜாஜ், ருமான்கான், நசீர் என்ற 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஷராபத் அலி, அசார் அலிபட் என்ற இரு இளைஞர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக