பாலியல் தொழிலில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்ட இலங்கை யுவதி ஒருவர் குறித்த வழக்கு டுபாய் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.யுவதிக்கு வயது 27. கடந்த வருடம் மார்ச் மாதம் அவுதாபிக்கு வந்தவர். வீட்டுப் பணிப் பெண்ணாக வேலை பார்த்தார். சுமார் ஒரு வருடத்துக்கு பின்னர்
எஜமானரின் வீட்டை விட்டு களவாக கிளம்பினார். இவரின் சகோதரிகள் சார்ஜாவில் இருந்தனர். சகோதரிகளிடம் செல்கின்றமைதான் இவரின் திட்டமாக இருந்தது.
பஸ் நிலையத்துக்கு சென்றார். ஆனால் இங்கு ஒரு நபர் இவருக்கு கதை கொடுத்தார். நல்ல வேலை வாங்கித் தருவார் என்று வாக்குறுதி வழங்கினார். இந்நபரின் பசப்பு வார்த்தைகளில் யுவதி மயங்கி விட்டார்.
டுபாயில் நைஃப் என்கிற இடத்தில் உள்ள தொடர் மாடிக்கு யுவதியை அழைத்துச் சென்றார் இந்நபர். இங்கு பாலியல் தொழிலில் சுய விருப்பத்தின் பேரில் ஈடுபடுகின்ற பாலியல் தொழிலாளிப் பெண்களுடன் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார். ஒவ்வொரு வாடிக்கையாளருடனும் செக்ஸ் வைத்துக் கொள்கின்றபோது தலா 15 டிராம் சம்பாதிக்க முடியும் என்று ஆசை வார்த்தைகள் சொல்லி இருக்கின்றார்கள்.
ஆனால் யுவதி சம்மதிக்கவில்லை. இதனால் விபச்சார விடுதி நடத்துனர்களான மூன்று ஆண்கள் இவரை அடித்து, அடைத்து வைத்து செக்ஸில் ஈடுபடுத்தி வந்திருக்கின்றனர்.
கடந்த ஜூன் மாதம் பொலிஸ் இத்தொடர் மாடியை முற்றுகை இட்டது. விபச்சார விடுதி நடத்துனர்களையும், இலங்கை யுவதி உட்பட பாலியல் தொழிலாளிப் பெண்கள் இருவரை கைது செய்தனர்.
விபாச்சார விடுதி நடத்துனர்களில் ஒருவர் பாகிஸ்தானியர். ஏனைய இருவரும் பங்காளதேஷ் நாட்டுக்காரர்கள்.
மூவருக்கும் வயது 27. ஆட்கடத்தல், கடத்தல், விபச்சார விடுதி நடத்துதல், விபச்சார விடுதி நடத்துகின்றமை மூலம் சம்பாதித்தல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் இம்மூவருக்கு எதிராகவும் சுமத்தப்பட்டு உள்ளன.
பாகிஸ்தானியர் இக்குற்றச்சாட்டுக்களை நிராகரித்து உள்ளார். பங்காளதேஷ் நாட்டுக்காரர்கள் கடந்த தவணையின்போது மனறுக்கு ஆஜராகவில்லை.
வழக்கு எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு செவிமடுக்கப்பட உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக