கொழும்பில் பாடசாலைச் சிறுமிகள் முன்னிலையில் தினமும் நிர்வாண போஸ் கொடுத்து வந்த நபர் மடக்கிப் பிடிக்கப்பட்டு உள்ளார்.இவரின் பெயர் அமித ரொஷான். ஹொரணவைச் சேர்ந்தவர். எஜமானனின் வாகனத்தில் தினமும் ஸ்ரீமாவோ பாலிக வித்தியாலயத்துக்கு வருவார்.
மாணவிகளை காண்கின்றபோது வாகனத்தை நிறுத்தி ஹோர்ன் அடிப்பார். சிறுமிகள் திரும்பிப் பார்ப்பார்கள். அப்போது வாகனத்தில் இருந்தபடியே கீழாடையை நீக்கி பிறப்புறுப்பை காட்டுவார். இவரின் செய்கையை கண்டு சிறுமிகள் வெட்கப்பட்டுச் சிரிக்கின்றமை வரை ரொம்பவே குஷிப்படுத்தி விடும்.
இவரின் அநாகரிக நடவடிக்கை குறித்துப் பாடசாலையின் பாதுகாப்பு ஊழியர்களுக்கு ஏற்கனவே பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று இருந்தன. இது வரை காலமும் இவர் பாதுகாப்பு ஊழியர்களிடம் அகப்படாமல் இலாவகமாக தப்பி வந்திருக்கின்றார். ஆயினும் நேற்று முன் தினம் வசமாக மாட்டிக் கொண்டார்.
பாதுகாப்பு ஊழியர்கள் இவரை கறுவாக்காட்டுப் பொலிஸ் நிலையப் பொலிஸாரிடம் கையளித்தனர். கறுவாக்காட்டுப் பொலிஸார் இவரை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கினர். நீதிமன்றம் இவரை எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் போட உத்தரவிட்டு உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக