மாதவரம் பேங்க் காலனியை சேர்ந்தவர் ஏசுதாஸ். தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி கவுரி (31). காதல் தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.ஏசுதாசுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது கவுரிக்கு தெரியவர, கணவரை கண்டித்தார். இதனால்
அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று காலையில் வெளியே சென்றவர் தாமதமாக வீட்டுக்கு வந்துள்ளார். ‘இவ்வளவு நேரம் எங்கே சென்று விட்டு வருகிறீர்கள் என்று கவுரி கேட்க தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் அதிகரித்த நிலையில் கோபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார் ஏசுதாஸ்.
இதில், மனம் உடைந்த கவுரி, மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திரும்பி வந்து பார்த்தபோது, கவுரி இறந்து கிடப்பதை பார்த்து ஏசுதாஸ் அதிர்ச்சியடைந்தார்.
சம்பவம் குறித்து மாதவரம் பால்பண்ணை போலீசில் கவுரியின் அண்ணன் கவுதம் புகார் செய்தார். அதில், ஏசுதாசின் தவறான பழக்க வழக்கத்தால்தான் எனது தங்கை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இன்ஸ்பெக்டர் காசியப்பன் வழக்கு பதிந்து ஏசுதாசிடம் விசாரிக்கிறார்.
0 கருத்து:
கருத்துரையிடுக