புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சீனாவில் சாங்குயிங் நகரைச் சேர்ந்தவர் தியான் ஷியூமிங். 6 ஆண்டுகளுக்கு முன்பு இவரது 18 வயது மகன் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.  அவரது உடலை அடக்கம் செய்யும்படி உறவினர்களும், பக்கத்து வீட்டுக்காரர்களும் தெரிவித்தனர்.


ஆனால் அதை ஏற்க ஷியூமிங்கும் அவரது மனைவியும் மறுத்து விட்டனர். மாறாக, அவரது உடலை தனது வீட்டில் உள்ள பெரிய குளிர்சாதன பெட்டியில் (பிரீஷரில்) வைத்து பாதுகாத்து வந்தனர்.

இது குறித்து சமீபத்தில் தெரிய வந்தது. அதை தொடர்ந்து பாதுகாத்து வந்த மகனின் உடலை போலீசார் பறிமுதல் செய்து அடக்கம் செய்தனர். இதுகுறித்து ஷியூமிங் கூறிய தாவது:-

எங்களுக்கு 2 மகன்கள் இருந்தனர். அவர்களில் மூத்த மகன் கடந்த 1997-ம் ஆண்டு தனது 15-வது வயதில் வெப்ப சலனத்தில் சிக்கி பலியானான். அவனது இறுதி சடங்கை மன வேதனையுடன் நடத்தினோம். இந்த நிலையில் எங்களது 2-வது மகனும் இறந்து விட்டான். அவனது இறுதி சடங்குகளை மன வேதனையுடன் நடத்த விரும்ப வில்லை. எங்களால் அது முடியவில்லை. ஏனெனில் 2-வது மகன் இறந்ததாக நாங்கள் நினைக்கவில்லை. இன்னும் எங்களுடன் உயிருடன் இருப்பதாகவே கருதுகிறோம்.

தினமும் குளிர்சாதன பெட்டியை திறந்து அவனது முகத்தை பார்த்து திருப்தி அடைந்து வந்தோம். மகன் உடலை 6 ஆண்டுகளாக வைத்து பாதுகாத்து வந்தது தவறுதான். அது எங்களுக்கும் தெரியும். இருந்தாலும் நாங்கள் மகன் மீதுள்ள பாசத்தால் இதுபோன்று செய்தோம். இதுவரை எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top