தனது காதலியையும், குழந்தையையும் தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற நபருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.ஜேர்மனியை சேர்ந்தவர் Gunnar D. இவர் தனது காதலியான ஜார்ஜினா என்ற பெண்ணுடன் வாழ்ந்து வந்த காலத்தில், இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
சந்தோஷமாக காலத்தை கழித்து கொண்டிருந்த வேளையில், திடீரென இவர்கள் பிரிந்தனர். உடனே நீதிமன்றம் மூலமாக பெண் குழந்தைக்கு ஜீவனாம்சம் தரும்படி அப்பெண் கோரினார்.
இதனையடுத்து இருவரையும் போர்ச்சுக்கல் நாட்டிற்கு அழைத்து சென்ற Gunnar D, அவர்களுடன் விளையாடுவது போன்று நாடகமாடி இருவரையும் தண்ணீரில் மூழ்கடித்து கொன்று விட்டான்.
அதன் பின் தொடரப்பட்ட வழக்கில் Gunnar D-யை கைது செய்து பொலிசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர் தான் குற்றவாளி என்பது தெரியவந்ததையடுத்து, இவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
0 கருத்து:
கருத்துரையிடுக