ஜேர்மனியில் வசிக்கும் துருக்கியர்கள், தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை தாய்நாட்டுக்கே கொண்டு செல்ல விரும்புவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
ஜேர்மனியில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் 57 சதவிகிதம் பேர் துருக்கியை தாயகமாக கொண்டவர்கள்.
இவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 33 சதவிகிதம் பேர் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை தாய்நாட்டுக்கே கொண்டு செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு நபரும் வருடத்திற்கு 1300 யூரோ வரை கொண்டு செல்கின்றனர். இத்தகவலை பெர்லின் நகரில் உள்ள Info என்ற ஆராய்ச்சி மையம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ஹோல்ஜெர் லில்ஜெபெர்க் கூறுகையில், துருக்கியருக்கு தாயகத்தின் தொடர்பு வலிமையாக உள்ளது.
இதனால் வருடத்துக்கு ஒவ்வொருவரும் சராசரியாக 250 யூரோ மதிப்பிலான உணவுப்பொருள் மற்றும் இதர பொருட்களை தமது நண்பர் மற்றும் உறவினர்களுக்குக் கொண்டு செல்கின்றனர். இவை ஏறத்தாழ ஆண்டொன்றுக்கு ஒரு பில்லியன் யூரோ ஆகிறது என்றார்.
மேலும் இவர்கள் ஆண்டிற்கு இரண்டு முறையாவது தமது தாயகத்துக்கு சென்று வருகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக