புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு




சவப்பெட்டிகள் எடுத்து சென்ற வாகனத்துக்குள் பதுங்கி பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். இவர்களை தடுக்க அந்நாட்டு எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நாய் பிஸ்கட்டுகள் வைக்கப்படும் பெட்டி, குளியல் தொட்டி உள்ளிட்டவற்றில் பதுங்கி பிரிட்டன் எல்லைக்குள் ஊருருவது வாடிக்கையாக உள்ளது.

இதற்கிடையே பல்கேரியா நாட்டிலிருந்து, பிரிட்டனுக்கு சவப்பெட்டிகளை ஏற்றிக்கொண்டு ஒரு வாகனம் வந்தது.

வழக்கம் போல் எல்லையில் உள்ள சோதனை சாவடியில் பிரிட்டன் பாதுகாப்பு படையினர் இந்த வாகனத்தை பரிசோதித்தனர். அப்போது சவப்பெட்டிகளுக்கிடையே மூன்று பேர் ஒளிந்திருந்தனர்.

ஆப்ரிக்காவில் உள்ள எரித்திரியா நாட்டை சேர்ந்த இந்த மூன்று பேரையும் பொலிசார் கைது செய்தனர். இவர்கள் பிரான்ஸ் நாட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top