கடல் படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்
ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் கடல் படத்தின் ஒரே ஒரு பாடல் வரும் 3ம் திகதி வெளியாகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் வளர்ந்து வரும் கடலில் கார்த்திக் மகன் கௌதமும் ராதா இளைய மகள் துளசியும் நடிக்கின்றனர்.
முழுநீளமாக கடல் சார்ந்தே இப்படப்பிடிப்பு நடந்து வருகிறது.
படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் படத்தில் வரும் நெஞ்சுக்குள்ளே என்ற ஒரு பாடலை வரும் 3ம் திகதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்களுக்கு இந்த பாடலை ஒரே நேரத்தில் கொண்டு சேர்ப்பதற்காக எம்.டி.வி மூலம் வெளியிடவிருக்கிறார்கள்.
இதில் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நேரடியாகவே இசையமைக்க போகிறார்.
இந்நிகழ்ச்சி வரும் 3ம் திகதி இரவு 8 மணிக்கு எம்.டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக