புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தன்னை ஏமாற்றியதாகக் கூறி, காதலி மீது காதலன் அசிட் தாக்குதல் நடத்திய சம்பவமொன்று காலி உடுகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.உடுகமவிலிருந்து காலி நோக்கிப் பயணித்த பேருந்தில் வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல்
சம்பவத்தில் 26 வயதான யுவதி ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த யுவதி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அசிட் தாக்குதலினால் பேருந்து நடத்துனரும், மேலும் நான்கு பயணிகளும் சிறு காயங்களுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்தத் தாக்குதலை நடத்திய நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும், பொலிஸார் சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top