தனது 5 பச்சிளம் குழந்தைகளையும் கொலை செய்து மண்ணுக்குள் புதைத்த தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.போலந்து நாட்டின் ஹிபோலிடோவோ கிராமத்தை சேர்ந்தவர் பீட்டா(வயது 41). இவருடைய கணவர் சமீபத்தில்
இறந்து விட்டார்.
கர்ப்பமாக இருந்த பீட்டா, சில நாட்களில் சாதாரணமாக காட்சி அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த சமூக ஆர்வலர்கள் பொலிசில் புகார் அளித்தனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் பீட்டாவின் பண்ணையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பிறந்து சில நாட்களேயான 4 வயது குழந்தைகளின் எலும்பு கூடுகளை பொலிசார் கண்டுபிடித்தனர். உடனடியா பீட்டாவை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அரசு வக்கீல் மரியா குடிபா கூறுகையில், கடந்த 1998ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை பீட்டாவுக்கு 8 குழந்தைகள் பிறந்துள்ளன.
தற்போது 2 குழந்தைகள் மட்டும் தான் உயிருடன் இருக்கின்றனர். 4 குழந்தைகளின் எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
5வது குழந்தையின் சடலத்தை தேடி வருகின்றனர. 6வது குழந்தையின் நிலை என்னவென்று தெரியவில்லை.
இறந்து குழந்தைகளுக்கு பீட்டா தான் தாயா என்பதை அறிய மரபணு சோதனை நடத்தப்படும். அத்துடன் மனநல மருத்துவரிடம் அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக