புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திருவையாறு அருகே உள்ள வானராங்குடியில் உள்ள ஒரு செங்கல்சூளையில் திருச்சென்னம்பூண்டி படுகையை சேர்ந்த மாரியய்யா(33) வேலை செய்து வந்தார். இதே சூளையில் கந்தவர்க்கோட்டையை சேர்ந்த ராமசாமி மனைவி மேகலா(26) என்பவரும் வேலை செய்து வந்தார்.


திருமணமான இவர்களுக்கிடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் செங்கல்சூளை அருகிலேயே தனிக்குடித்தனம் நடத்தினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

நாளடைவில் மாரியய்யாவுக்கு இந்த காதலும் அலுத்துப்போனது. எனவே அதே பகுதியில் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு அந்த பெண்ணுடன் அவ்வப்போது ஜாலியாக இருந்து வந்தார். அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி பெண் வீட்டார் வற்புறுத்தினர். அதற்கு மாரியய்யா மறுத்தார்.

தொடர்ந்து மாரியய்யா அங்கு வந்து செல்வதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே அந்த பெண்ணுடன் பழகியதற்காக ஒரு தொகையை கொடுத்து விட்டு ஒதுங்கிய மாரியய்யா மீண்டும் மேகலாவுடன் குடும்பம் நடத்தினார்.
புதிய காதலி வீட்டுக்கு செல்ல விடாமல் தடுத்ததற்கு காரணம் மேகலா தான் என மாரியய்யா கருதி அவரை தினமும் அடித்து உதைத்து வந்தார். இதன் உச்சகட்டமாக மேகலா மீது பைக்கை ஏற்றிக் கொல்ல முயன்றுள்ளார். இதில் படுகாயமடைந்த மேகலா திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் செய்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top