பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த ஆசிரியை ஒருவரின் முகத்தில் மிளகாய்த் தூளை வீசிவிட்டு அந்த தங்கச் சங்கலியைப் பறித்துச் சென்றவர்களை ஹட்டன் பொலிஸார் மடக்கிப் பிடித்த சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
சாமிமலை, கவிரவிலப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் நோர்வூட் நகருக்கு அருகிலுள்ள பிரதான பாதையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது அந்தப்பாதையில் முச்சக்கர வண்டியில் வந்த மூவர், அவ்வாசிரியையின் முகத்தில் மிளகாய்த்துளை வீசிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியைப் பறித்துத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதன் பின்பு தன்னைச் சுதாகரித்துக் கொண்ட ஆசிரியை இது தொடர்பில் நோர்வூட் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதன் பின்பு துரிதமாக செயற்பட்ட பொலிஸார், டிக்கோயா பிரதேசத்தில் வைத்து குறிப்பிட்ட முச்சக்கர வண்டியைக் கைப்பற்றியதோடு அந்த வண்டியில் சென்ற சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர். இவர்களை அட்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு ஹட்டன் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக