புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இலக்கம் 87 கிராண்ட்பாஸ் வீதி கொழும்ப 14 என்ற இடத்தில் உள்ள வீட்டில் இருந்து நேற்று மாலை மீட்கப்பட்ட மூன்று சடலங்கள் மீதான நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை என்பன இன்று (27) இடம்பெறவுள்ளன.


ஆமர் வீதி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் கொழும்பு கிராண்ட்பாஸ், ஆமர் வீதியில் நேற்று (26) மாலை தாய், தந்தை, குழந்தை என மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டது.

சடலமாக மீட்கப்பட்டவர்கள் தலவாக்கலையைச் சேர்ந்த 38 வயது தந்தை சிவலிங்கம் ஸ்ரீகாந்தன், அவரது மனைவியான 24 வயதுடைய கோகிலவாணி மற்றும் அவர்களின் மகனான 2 வயதுடைய ஸ்ரீகாந்தன் சர்வேஸ் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர்கள் தங்கியிருந்த கூலி வீட்டில் இருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில், கடன்சுமையே தமது தற்கொலைக்கு காரணம் என எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆமர் வீதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top