தன்னை ஒரு கும்பல் கடத்திச் சென்று கற்பழித்துவிட்டதாக பொய் சொல்லி, பெற்றோரை நம்ப வைத்து, போலீசாரிடமும் பொய் வாக்குமூலம் அளித்துள்ள ஒரு வாய் பேச முடியாத பெண்ணின் வாக்குமூலம் பொய்யானது என்று தெரிந்து அதிர்ந்து
போய் இருக்கிறது போலீஸ்!
பேச்சுத் திறனற்ற 17 வயது மாணவி ஒருவர், மும்பையின் புறநகர் பகுதியான டிராம்பேயில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் படித்து வருகின்றார். சம்பவத்தன்று, அந்த மாணவி வழக்கமாக பள்ளியில் இருந்து வீடு திரும்ப வேண்டிய நேரத்தில் வீட்டுக்கு வந்து சேராததால், கலக்கமடைந்த தந்தை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அன்று நள்ளிரவில் தலைவிரி கோலமாக அந்த மாணவி வீடு வந்து சேர்ந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், என்ன நடந்தது? என்று கேட்டபோது, தன்னை ஒரு கும்பல் கடத்திச் சென்று கற்பதித்து விட்டதாக செய்கையால் அவர் விளக்கினார். அவரை உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பெற்றோர், அவரது வாக்குமூலத்தை போலீசாரிடம் பதிவு செய்தனர்.
இதையடுத்து, அந்த மாணவியை கட்கோபரில் உள்ள ராஜவாடி ஆஸ்பத்திரியில் போலீசார் அனுமதித்தனர். டாக்டர்கள் அவரை சோதித்தபோது, மாணவியின் வாக்குமூலத்துக்கும், அவரது உடற்கூறுக்கும் இடையில் ஏகப்பட்ட முரண்பாடுகள் உள்ளது தெரிய வந்தது.
டாக்டர்களின் அறிக்கையை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், மீண்டும் அவரை ‘தகுந்த’ முறையில் விசாரித்தபோது, அந்த திடுக்கிடும் உண்மை வெளிப்பட்டது.
விரைவில் நடக்கவுள்ள பள்ளித்தேர்வுக்கு தயாராக இருக்கும்படி மாணவியின் தந்தை அவரை வற்புறுத்தியுள்ளார். சரியாக படிக்காத அவர் தேர்வு எழுதுவதை தவிர்க்க அவசர அவசரமாக ஓர் திட்டத்தை தீட்டியுள்ளார்.
அந்த திட்டத்தின்படி, சம்பவத்தன்று ஆண் நண்பர் வீட்டுக்கு சென்ற அவர், சுமார் 3 மணி நேரம் அங்கு அவருடன் தகாத முறையில் இருந்துள்ளார்.
நேரம் கழித்து வீடு திரும்பியது குறித்து பெற்றோர் விசாரித்தபோது தன்னை ஒரு கும்பல் கடத்திச் சென்று கற்பழித்துவிட்டதாக பொய் சொல்லி, பெற்றோரை நம்ப வைத்து, போலீசாரிடமும் பொய் வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது போலீசாரின் மறு விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.
அந்த பெண்ணின் ஆண் நண்பரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.