தமிழர் வரலாற்றில் வேட்டி முக்கிய இடம் வகிக்கிறது. திருமணத்தில் இருந்து மரணச்சடங்கு வரை அனைத்து மத சடங்குகளிலும் வேஷ்டி முக்கியமாக கருதப்படுகிறது.
இந் நிலையில் இன்றைய இளைய சமுதாயத்தின் மத்தியில் வேட்டியின் பயன்பாடு இல்லாமல் போய் விட்டதால் அவர்கள் எப்படி வேட்டியை கட்டுவது என்பது கூட தெரியாமல் இருக்கிறார்கள்.
வேட்டி கட்ட வேண்டுமெனின் தாத்தாவின் உதவியையோ, இல்லை பக்கத்து வீட்டு ஆங்கிளின் உதவியையோ நாடவேண்டியுள்ளது.
வேட்டி கட்டுவது எப்படி என்பதையும், அதில் பெரிதாக கஷ்டபட வேண்டிய விடயங்கள் ஒன்றும் இல்லை என்பதையும் எடுத்து காட்டவே இப்பதிவு.