புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது வீட்டில் தனியாக இருந்த தாயொருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய முன்னாள் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இரண்டு வயது பிள்ளையின் தாயான பாதிக்கப்பட்ட பெண் வீட்டில் தனியாக இருந்த வேளை பக்கத்து விட்டு 26 வயதான நபரால் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று முந்தினம் (28) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நெளுவ பகல ஹிங்கும்மட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் அந்த பெண்ணின் கணவர் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குறித்த பெண் தனது கணவனை் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரை சென்று மாலை​வேளையில் பார்த்து வரும்படியும் அதற்காக பணம் தருவதாகவும் பக்கத்து வீட்டு இளைஞனிடம் தெரிவித்துள்ளார்.

எனினும் அந்நபர் வைத்தியசாலைக்குச் செல்லாது இரவுவேளையில் பிறிதொரு நபருடன் மதுபோதையில் அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்று பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளார்.

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள இந்நபரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் தொடர்புடைய மற்றைய நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
Top