உலகில் அவ்வப்போது சில ஆச்சரியமான சம்பவங்கள் நிகழ்வதுண்டு. அது போல இங்கிலாந்து நாட்டில் 25—வது வாரத்தில் குறைப்பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள்
நல்ல ஆரோக்கியம் பெற்று தங்களது முதலாவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர்.
அங்குள்ள பிரிஸ்டோல் நகரில் வசிக்கும் தம்பதி ராஷால்–ஆஷ்லே கர்ப்பிணியாக இருந்த ஆஷ்லேக்கு 24–வது வாரமே திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது.
இதனால் அவரை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அடுத்த 5 நாளில் அடுத்தடுத்து 3 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.
குறைப்பிரசவமாக 24 வாரத்தில் பிறந்ததால் குழந்தைகளின் எடை 1 கிலோவுக்கும் (2 பவுண்ட்) குறைவாக இருந்தது. ‘குழந்தைகள் குட்டி பொம்மை போல இருக்கிறார்களே?’ என ஆஷ்லே வியந்தார்.
இதனால் 3 குழந்தைகளையும் மருத்துவமனையில் இன்குபேட்டரில் வைத்து சில மாதங்கள் பராமரித்தார்கள். 3 குழந்தைக்கும் ஆஷ்லே தாய்ப்பால் கொடுத்தார்.
மேலும் மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சை மற்றும் தாயின் சிறந்த அரவணைப்பு ஆகியவற்றின் மகிமையால் 3 குழந்தைகளுமே ஓராண்டிற்குள் முழு உடல்நலம் பெற்று விட்டார்கள்.
கடந்த வாரம் இந்த அதிசய குழந்தைகளின் முதலாவது பிறந்த நாளை பெற்றோர் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

0 கருத்து:
கருத்துரையிடுக