தனியார் தொ(ல்)லைக்காட்சிகளின் எண்ணிக்கை தாறுமாறாகிக் கொண்டிருக்கிறது. இதில் ஒற்றை வீடியோ கேமிராவை கொண்டு உள்ளூரையே புரட்டிப் போடும் சேனல்கள் சில, சிட்டியில் கோடிகளை கொட்டி உருவாக்கப்பட்ட சேனல்களை கூட சின்னதாக்குகிற அளவுக்கு புரோகிராம்களை
கொடுக்கின்றன. அரசியல் சேனல், ஜோதிட சேனல், பக்தி சேனல், முக்தி சேனல், முதியோர் சேனல், என்று வகை வகையாக பிரிக்கப்பட்டு வரும் இந்த சேனல்கள் நமது பொன்னான நேரங்களையும் ஸ்வாகா செய்து வருவது குறிப்பிடத்தக்க விஷயம்.
விஜயகாந்தின் கேப்டன் டி.வியில், பாட்டு நேரம் போக விஜயகாந்தின் நகர்வலப் பெருமையை அப்படியே ஒளிபரப்பி வருகிறது. சில காட்சிகளை வெட்டவும் மனசில்லாமல் அப்ப்ப்ப்ப்படியே வெளியிடப்படும் அந்த ஃபுட்டேஜுகள் அவரது படத்தை விட சுவாரஸ்யமாக இருக்கிறது. அரசியல் ஆசையுள்ள எவரும் சேனல் இல்லாமல் இயங்க முடியாது என்ற சூழலில், துப்பாக்கி ஹீரோவுக்கும் அத்தகையை ஆசை கொழுந்துவிட்டு எரிகிறதாம்.
முறையே அனுமதி பெற்று சேனல் துவங்குகிற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம். அரசியல் கட்சி ஆரம்பிக்க ஏற்ற சூழல் இன்னும் அமையாததால் மன்றக் கொடியோடு நிறுத்திக் கொண்டிருக்கும் அவர் அடுத்த ஸ்டெப் வைக்க ஆவலோடு காத்திருக்கிறார். இந்த நேரத்தில் சேனலின் அவசியத்தை அவருக்கு அறிவுறுத்தினார்களாம் அவரது நலம் விரும்பிகள். சேனலுக்கு இளையதளபதி என்று பெயர் வைக்கக்கூடும்
0 கருத்து:
கருத்துரையிடுக