புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பாகிஸ்தானில் வெளியாகும் விளம்பரங்களில் அதிகளவு ஆபாசம் இருப்பதாகவும், இதனால் பாகிஸ்தானில் கலாசாரம் கெட்டு சீரழிவதாகவும் பலதரப்பில் இருந்து புகார்கள் எழுந்துள்ளன.இந்தியாவில் உள்ள டிவி சேனல்கள் பாகிஸ்தானிலும் ஒளிபரப்பாகின்றன. இந்த சேனல்களில் ஆபாச காட்சிகள்
இடம்பெறுவதாகவும், விளம்பரங்களில் நடிக்கும் இந்திய மொடல் அழகிகள் ஆபாசமாக தோன்றுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் கமார் ஜமான் கைரா தலைமையில், நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் இஸ்லாமாபாத்தில் நடந்தது.

அப்போது இந்திய நடிகைகள், மொடல்கள் ஆபாசமாக இடம்பெறும் விளம்பரங்களை பாகிஸ்தானில் தடை செய்ய வேண்டும். அத்துடன் நியூஸ் சேனல்களில் செய்தி வாசிப்பவர்கள் தலையை துப்பட்டாவால் மூடியிருக்கும்படி உடை அணிய உத்தரவிட வேண்டும் என்று நிலைக் குழு உறுப்பினர்கள் பரிந்துரை செய்தனர்.

அதற்கு அமைச்சர் கைரா பதில் அளிக்கையில், இந்த பிரச்னை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்றத்தின் முடிவு வரும் வரை நாம் காத்திருப்பது நல்லது என்றார்.

விளம்பரங்களில் ஆபாசம் இருப்பது தொடர்பான வழக்கை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் சமீபத்தில் விசாரித்தது. அப்போது பாலிவுட் நடிகை கேத்ரினா கைப் நடித்துள்ள விளம்பரம், குடும்பத்தினருடன் பார்க்க முடியாத வகையில் உள்ளது என்று தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் ஷாருக்கான், கஜோல், ஷில்பா ஷெட்டி, கரீனா கபூர் உள்பட பாலிவுட் நடிகர், நடிகைகள் பலர் நடித்துள்ள விளம்பரங்களில் ஆபாசம் இருப்பதாக பாகிஸ்தானில் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top