மட்டக்களப்பு ஓட்டமாவடியைச் சேர்ந்த 3 வயது சிறுவனொருவன் மலசல கூடத்திற்காகத் தோண்டப்பட்ட குழியில் வீழ்ந்து பலியான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
ஓட்டமாவடி காகித நகர் அல் மஜ்மா கிராமத்தில் நேற்று பிற்பகல் பதுறுதீன் அப்துல் அஸீஸ் எனும் இச்சிறுவன் மலசலகூடத்திற்காகத் தோண்டப்பட்டு மூடப்படாமல் மழை நீர் நிரம்பிக் கிடந்த குழிக்குள் விழுந்துள்ளான்.
தனது குழந்தையைக் காணவில்லையென தேடிய அக்குழந்தையின் தந்தை, மலசலகூடக் குழியில் வீழ்ந்து கிடந்ததைக் கண்டு உடனடியாக மீட்டு, வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
எனினும், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக