பொதுவாக திருமணத்திற்கு குருப் பலன் இருந்தால் நல்லது என்று சொல்கிறோம். ஏனென்றால் குருவருள் திருவருள் என்று சொல்லப்படுகிறது. நல்ல தசா புத்தி இருந்தாலும் திருமணம் முடிக்கலாம். அதில் பிரச்சனை இல்லை.
சாதாரணமாக சனி திசை, ஏழரை சனி என இரண்டும் நடக்கும் போது தவிர்க்கலாம். அடுத்து ஏழரைச் சனி நடக்கும் போது இராகு திசை நடந்தாலும் தவிர்க்கலாம். இதேபோல, ஏழரைச் சனி நடக்கும் போது கேது திசை நடந்தாலும் திருமணத்தை தவிர்க்கலாம்.
இதெல்லாம் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஒரு த்ரில்லிங்காக இருக்கக்கூடிய காலகட்டம். எப்ப வேண்டுமானாலும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். தலைக்கு மேலே கத்தி இருப்பது போன்ற காலகட்டம். ஆனாலும், இதனையும் முறியடிக்கும் விதமான பெண்ணினுடைய ஜாதகமோ அல்லது துணையினுடைய ஜாதகமோ நல்ல திசையுடன் யோக திசையுடன் இருந்தால் அதனைக் கூட சேர்த்து வைப்போம்.
வரன் பார்க்கிற ஒரு பையனுக்கு இராகு திசையும், ஏழரைச் சனியும் ஒன்றாக நடக்கிறது என்று வேண்டாம் என்று சொல்வோம். அதுவே, பெண்ணிற்கு சுக்ர திசை, குரு திசை இருந்தால் அது சமன் செய்யப்படும். அதுபோல ஜாதகம் வரும் வரை காத்திருந்து பொருத்தம் பார்த்து திருமணம் முடிக்கலாம் என்று சொல்கிறோம்.
0 கருத்து:
கருத்துரையிடுக