புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


செவ்வாய் தோஷம். இதைக் கேட்டவுடன் அலறுபவர்கள் பலர். காரணம், கல்யாணத்திற்கு பெரும் தடையாக இருக்கும் முக்கிய தோஷம் இது.
ஆனால் செவ்வாய் தோஷம் என்றாலே சிக்கல்தானா, உண்மையில் செவ்வாய் தோஷம் என்றால் என்ன என்பது குறித்து முழுமையான ஜோதிட தகவல்களை அறிந்து கொள்ள
சத்தியமங்கலத்தை சேர்ந்த பிரபல ஜோதிடர் சக்தி கிருஷ்ணகுமாரை சந்தித்து பேசினோம்.
அவர் கூறியதாவது:
லக்கனம், சந்திரன், சுக்கிரன் முதலியவைகளுக்கு 2,4,7,8,12, ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாக கருத வேண்டும்.
இந்த செவ்வாய் தோஷம் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருந்தால் திருமணம் செய்யலாம்.
ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றொருவற்கு செவ்வாய் தோஷம் இல்லை எனில் அவர்களுக்கு திருமணம் செய்யக்கூடாது.
ஆனால் இதற்கு சில விதிவிலக்குகள் உள்ளன.
மேஷம், விருச்சிகம், மகரம், ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.
குரு, சூரியன், சனி சந்திரனுடன் சேர்ந்திருந்தால் தோஷமில்லை.
சூரியன், சந்திரன், குரு, சனி, ஆகியவற்றால் பார்க்கப்பட்டால் பாவமில்லை என சோதிடம் கூறுகிறது.
சிம்மம், அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.
வாசக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் ஜோதிட பாடத்தில் செவ்வாய் தோஷம் பற்றி பார்க்க விருக்கிறோம்.
திருமணப் பொருத்தம் பார்க்கும்போது , கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களில் செவ்வாய் தோஷமும் ஒன்று. ஆனால் இந்த செவ்வாய் தோஷம் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருந்தால் திருமணம் செய்யலாம். ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றொருவற்கு செவ்வாய் தோஷம் இல்லை எனில் அவர்களுக்கு திருமணம் செய்யக்கூடாது என்பது ஜோதிட விதி.
செவ்வாய் ரத்த காரகன். யுத்த காரகன். எனவே பொருத்தம் பார்க்க விரும்புபவர்கள் செவ்வாய் இருக்கும் நிலையை சரியாக கணிக்க வேண்டி இருக்கிறது. செவ்வாய் நீசமாகவோ, பலமின்றியோ இருந்தால் ரத்த அணுக்கள் ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட சற்றே கூடுதலான காம உணர்ச்சி இருக்கும் . தாம்பத்தியத்தில் தொடர்ந்து நாட்டம் இருக்கும். ஆனால் தோஷம் இல்லாதவர்கள் காலப் போக்கில் தாம்பத்தியத்தில் இருந்து விலகுவர்.
தோஷம் உள்ளவர்களுக்கு, தோஷம் இல்லாதவர்களை திருமணம் செய்து வைத்தால், அவர்களுக்கிடையில் தாம்பத்திய ரீதியான பிரச்சனைகள் ஏற்படும். சூசகமாகக் கூற வேண்டுமென்றால் ஒருவர் விரும்ப, ஒருவர் அதற்க்கு மறுப்பு தெரிவிப்பார்.
ஒருகட்டத்தில் உங்களுக்கு தேவைப்பட்டால்/விருப்பமிருந்தால் வேறு எங்காவது சென்று கொள்ளுங்கள் என்று  விளையாட்டாக கூறினாலும், அதை  தனக்கு கிடைத்த அனுமதியாகக் கருதி வேறு துணையை தேடுவார்.
செவ்வாய் தோஷத்தால் பெற்றோருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதேபோல் மாமனார், மாமியாரையும் செவ்வாய் தோஷம் பாதிக்காது. தாம்பத்திய, காம வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தோஷம் உள்ள இருவருக்கும் திருமணம் செய்து வைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
லக்கனம், சந்திரன், சுக்கிரன் முதலியவைகளுக்கு 2,4,7,8,12, ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாக கருத வேண்டும்.
2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் உள்ள எல்லோருக்கும் செவ்வாய் தோஷம் என்று கூறிவிட முடியாது.
நடைமுறையில் லக்கினத்தை மட்டுமே கணக்கில் எடுத்து பெரும்பாலான ஜோதிடர்கள் கூறுவர்.  சிலர் முதல் வீட்டையும் கணக்கில் எடுப்பது உண்டு.
சில விதிவிலக்குகள் உள்ளன :
மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் வலிமை குன்றி தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
காரணம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட வீடுகளில் செவ்வாய் ஆட்சி, உச்சம், நீசம், பெற்று இருப்பதால் தோஷம் குன்றும். மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய லக்னங்களிலோ இராசியிலோ பிறந்தவர் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.
குரு, சூரியன், சனி சந்திரனுடன் சேர்ந்திருந்தால் அல்லது பார்க்கப் பட்டால்  தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
சிம்மம் , ரிஷபம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
4 - ம் இடம் மேஷம், விருச்சிகம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
7 - ம் இடம் கடகம், மகரம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
8 - ம் இடம் தனுசு, மீனம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை என்ற நிலை ஏற்படும்.
 மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்தவர் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.
ஜாதகத்தில் லக்னத்தையோ, 7ம் இடத்தையோ,பெண்களுக்கு 8ம் இடத்தையோ குரு பார்த்தால் உங்களுக்கு தோஷம் கிடையாது.
 7ம் இடம்,, 8ம் இடம்[பெண்களுக்கு மட்டும்] மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய லக்னங்களாக வந்தால் உங்களுக்கு தோஷம் கிடையாது.
செவ்வாய் அமர்ந்த நக்ஷத்திரக்கால் : மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நக்ஷத்திரங்களில் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.
இதே போல் நிறைய விதி விலக்குகள் உண்டு.
தினமும் கந்த ஷஷ்டி கவசம் பாராயணம் செய்தல் செவ்வாய் தோசத்திற்க்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம் ஆகும்.
எனவே செவ்வாய் தோஷம் என்றாலே வாசகர்கள் - ஜாதகம் பார்க்க வரும் அன்பர்களை பயமுறுத்தி விட வேண்டாம். இன்றைய நடைமுறையில் , பாதிக்கும் மேல் , செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தான் அதிகம். திருமண தாமதத்திற்கு , செவ்வாய் தோஷம் மட்டுமே காரணம் ஆகாது.
சரி, இன்னும் சில தெரிந்து கொள்ள வேண்டிய ஜோதிட விதிகளை காண்போம்.
அன்பர்களே , இது அனைத்தும் பொதுவான விதி முறைகள் தான். ஆனால், ஒருவருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் பலமாகவும், குல தெய்வம் அருளும் , உங்களை பெற்றவர்களை, அல்லது புகுந்த வீட்டில் மாமனார் / மாமியாரை  பொறுப்பாக  கவனித்து நீங்கள் சேர்த்து வைக்கும் புண்ணியமும் இருந்தால், எந்த நாளும் உங்களுக்கு , ஒரு தீங்கும் ஏற்படாது. இது நான் ஆராய்ந்த நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஜாதகங்களிலிருந்து , எனக்கு கிடைத்த அனுபவ முடிவு.
இரண்டும், இரண்டிற்கு மேற்பட்ட தாரம் ஏற்படக்காரணம் :
7ம் அதிபதி கெட்டு கெட்டவர்கள் வீட்டில் அமையப்பெற்றால் இருதார யோகம் உண்டு.  ( யோகமா  ??  ஆம். ஒரு சிலருக்கு வாழ்க்கை துணை தவறி விட்டால், திரும்பவும் திருமணம் நடைபெற வேண்டிய சூழல் ஏற்படுகிறதே ! )
7ம் அதிபதி ராகுவுடன் சேர்க்கை பெற்றாலோ அல்லது 7ம் இடத்தில் அசுபர் இருந்தாலோ , இரண்டு அசுபர்கள் 2ம் இடத்தில் அமைந்தாலோ
7ம் அதிபதி 10ல் அமையப் பெற்று ஆட்சி, உச்சம், நட்பு பெற்று 10ம் அதிபதியால் பாக்கப்பட்டாலோ
11ம் வீட்டில் இரண்டு வலிமையான கிரகங்கள் அமையப் பெற்று இருந்தாலோ
7ம் அதிபதியும் சுக்கிரனும் இணைந்து இருந்தாலோ அம்சத்தில் சேர்ந்து காணப்பட்டாலோ
7ம் அதிபதி கெட்டு 11ல் இரு கிரகங்கள் அமையப் பெற்றிருந்தாலோ
7ம் இடத்தில் சுக்கிரன், சனி இணைந்து காணப்பட்டாலோ
இரண்டாம் தாரம் உண்டா என்பதைப் பார்க்க நீங்கள் பார்க்க வேண்டிய முக்கியமான ஸ்தானம் - பதினொன்றாம் வீடு தான். அந்த வீட்டின் நிலைமை, வீட்டு அதிபதியின் நிலைமை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
விதவைப் பெண் :
7ம் இடத்தில் உள்ள செவ்வாய் சூரியன் சேர்க்கை  பெற்றால் , சூரிய தசை அல்லது செவ்வாய் தசையில்  அவள் விதவையாவாள்.
மூன்று அசுபர்கள் 7ம் இடத்தில் அமையப்பெற்றால் அந்தப் பெண் மாங்கல்ய பலம் இழந்து விடுவாள்.
8ம் இடமான மங்கல்ய ஸ்தானத்தில் செவ்வாய், சனி, ராகு, கேது, போன்ற அசுபர்கள் அமையப்பெற்றாலும் விதவையாகி விடுவாள்.
7ம் இடத்தில் சனி, செவ்வாய் போன்ற அசுபர்கள் இணைந்து இருந்தால்  இளவயதில் மாங்கல்ய பலம் இழ்க்க நேரிடும்.
விவாகரத்து :
மங்கையர்களின் ஜாதகத்தில் 7ம், 8ம் இடங்கள் கெட்டிருந்தாலும்
லக்கினாதிபதி,  7ம் இடத்திற்கு அதிபதி 6, 8 போன்ற மறைவிடத்தில் இருந்தாலும் ,
12ம் இடத்தில் ராகு, 6ம் இடத்தில் கேது அமையப் பெற்ற பெண்களும்,
7ம் இடத்தில் நீச கிரகம் இருந்து சுபரால் பார்க்கப்பட்டாலும் விவாகரத்து அமையப் பெறும்.
6-ம் வீடும், 7-ம் வீடும் தரும் களத்திர தோஷம்:
இது கொஞ்சம் சுவாரஸ்யமான விஷயம். ஆறாம் ஸ்தானம் கடன் , நோய் எதிரி. ஏழாம் வீடு களத்திரம் . இல்லையா?
அப்படிப்பட்ட ஏழாம் வீட்டிற்கு - ஆறாம் வீடு , பன்னிரெண்டாம் வீடாக , அதாவது விரய  ஸ்தானமாக வருகிறது. ஆறுக்கும், ஏழுக்கும் - ஜாதகத்தில் சம்பந்தம் இருக்கிறதா என்று பாருங்கள்.... உங்களுக்கே வியப்பாக இருக்கும்.  இப்படி இணைந்து இருந்தால் வரும் வாழ்க்கைத் துணை சண்டைக் கோழியாகத் தான் பெரும்பாலும் அமைகிறது. மோசமான தசா / புக்தி காலங்களில் அவர்கள் கோர்ட் படியேறும் சூழ்நிலையும் ஏற்பட்டு விடுகிறது.
===========================
சரி, இன்றைக்கு பாடம் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். முந்தைய பாடங்கள் சரி வர புரிந்து இருந்தால்  தான் வர விருக்கும் பாடங்கள் - உங்களுக்கு எளிதில் புரியும். ஏதாவது சந்தேகம் இருப்பின் , தொடர்பு கொள்ளுங்கள்.... வாசகர்கள் தொடர்ந்து அளிக்கும் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி... வந்தனம்.
செவ்வாய் தோஷம் என்பது தம்பதிகளுக்கு இரத்த பிரிவுகள் ( blood group ) பொருத்தத்தை குறிக்கிறது.
ஆண்,பெண் இருவருக்கும் (Rh) +ve அல்லது இருவருக்கும் -ve ஆக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படும்.
உதாரணத்திற்கு, -வ் பிரிவை சேர்ந்த பெண்ணுக்கும் , +வ் ஆணுக்கும் , பிறக்கும் குழந்தை +வ் ஆக உள்ள போது , குழந்தையில் இரத்ததில் உள்ள +வ் body , குழந்தை பேறு காலத்தில் ரிட்டன் ஆகி தாய்க்குச் சென்றுவிடும். இதன் விளைவாக தாய்க்கு அடுத்த சேய் தோன்றாமல் கருச்சிதைவு ஏற்படும்.
இதற்காக தாய்க்கு anti body injection போட்டு விடுவார்கள்.........
செய்வாய் தோசம் + - பொருத்தத்தை பார்க்கிறது அவ்வளவு தான்......
ஜாதகம் பார்த்தால் இந்த +/- விபத்து தவிர்க்கப்படும்.......
இரத்த பரிசோதனை செய்யாமலேயே நம்ம முன்னோர்கள் செய்த ஏற்பாடு தான் இது.....
செவ்வாய் தோஷம் என்றாலே மக்கள் மத்தியில் சொல்ல முடியாத பயம் காணபடுகிறது
      செவ்வாய் கிழமையில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷம் உண்டு என்ற
ஆதாரமற்ற புரளி மக்கள் மத்தியில் காணபடுகிறது . இது தவறான கருத்தாகும் .
செவ்வாய் கிழமைக்கும் ,செவ்வாய் தோசத்திற்கும் சிறிது கூட சம்பந்தமில்லை .
     ஒரு ஜாதகத்தில் 2 , 4 , 7 , 8 , 12 போன்ற இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய்
தோஷம் என்று கூறபடுகிறது.
    செவ்வாய் ஜென்ம லக்னத்தில் இருந்தாலும் சிலர் செவ்வாய் தோஷம் என்று
வாதிடுவார்கள். இயற்கையிலேயே செவ்வாய் மிகவும் கொடியவர் . அவர் ஜென்ம
லக்னத்தில் அமைய பெற்று 7,8 போன்ற இடங்களை பார்வை செய்வதால் செவ்வாயின்
கொடிய பார்வை 7 , 8 போன்ற இடங்களுக்கு கிடைக்க பெறுவதால் செவ்வாய் லக்னத்தில் இருந்தாலும் " செவ்வாய் தோஷம்" தான்.
    ஜென்ம லக்னத்திலிருந்து செவ்வாய் தோஷம் பார்ப்பது போல் ,சந்திரன் நின்ற
ராசியிலுருந்தும் செவ்வாய் தோஷம் கணக்கிட வேண்டும் .
அது போல் சுக்கிரன் நின்ற ராசிக்கும் 1 , 2 , 4 , 7 , 8 ,12 ல் செவ்வாய் உள்ளாரா? என்றும்
பார்க்க வேண்டும் .
     செவ்வாய் தோசத்திற்கும் சில விதி விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன ,செவ்வாய்
மேஷம் ,கடகம் ,விருச்சிகம் ,மகரம் போன்ற ராசிகளில் அமைய பெற்றால் செவ்வாய்
தோஷம் உண்டாவதில்லை .
      செவ்வாய் சூரியன் வீடாகிய சிம்மதிலே அமைய பெற்றாலும் ,கும்பத்திலே
அமைய பெற்றாலும் செவ்வாய் தோஷம் உண்டாகாது .
    செவ்வாய் பகாவான் குரு ,சூரியன் ,சனி போன்றவருடன் சேர்க்கை பெற்றாலும் ,
பார்வை பட்டாலும் செவ்வாய் தோஷம் ஏற்படுவதில்லை .
  சூரியனுடன் செவ்வாய் சேரும்போது செவ்வாய் தோஷம் அஷ்தங்கம் உண்டாகிறது .
   ஒரு பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருந்தால் அவளை திருமணம் செய்து கொள்ளும் கணவனுக்கும் செவ்வாய் தோஷம் இருக்க வேண்டும் .
  இல்லா விட்டால் அந்த பெண்ணுக்கும் செவ்வாய் திசையோ அல்லது செவ்வாய்
புத்தியோ நடைபெற்றால் கண்டிப்பாக கணவனுக்கு கெடுதி உண்டாகிறது .
  செவ்வாயோடு புதன் சேர்ந்தாலும் ,புதன் பார்வை செவ்வாய்க்கு உண்டானாலும்
செவ்வாய் தோசத்திற்க்கு பரிகாரம் உண்டாகிறது .
    ஒரு பெண்ணிற்கு செவ்வாய் தோஷம் இருந்தால் எளிதில் திருமணம் ஆவதில்லை .
காலம் கடந்து திருமணம் நடைபெற்றாலும் ,தேவையில்லாத கருத்து வேறுபாடு
கணவன் , மனைவிக்குள் பிரிவு ,வாழ்வில் எப்போதும் சண்டை ,சச்சரவு போன்ற
அனுகூலமற்ற பலன்கள் உண்டாகின்றன .
     செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய் பகவான் வழிபாடு செய்வதும் ,
செவ்வாய்க்கு அதிபதியாகிய முருக கடவுளை வணங்கி வழிபாடு செய்வது கெடுதிகளை
குறைக்கும் .
செவ்வாய் கிரகம் சிவந்த நிறம் கொண்டது.பொதுவாக செவ்வாய் சகோதரகாரகன் என்று சொல்லப்பட்டாலும் மண் பாண்டம் செய்பவர், அக்கினி  சம்பந்தமான வேலைகள்,  ராணுவம், ரத்தம், ரணம்  எனப்படும் காயம்,   சாதனைகள், சிவந்த ரத்தினம், செம்பு முதலானவற்றுக்கும் பொறுப்பாகின்றார்.
மேலும் பவளம், துவரை, நெருப்பு பயம், துவேசம், கடன், சோரம், சுய சிந்தனை, வீரியம், உற்சாகம், ஆடு, சேனைகளின் தலைமை, அதிகாரம், இனம்தாழ்ந்த நிலைப்பாடு, ஆயுள் குறைவை ஏற்படுத்துதல், விபத்துக்கு துணை போன்ற பல  பொறுப்புகளை பெற்றிருந்தாலும் ரத்த அணுத் தொடர்பில் வம்ச வளர்ச்சிக்கு காரணகர்த்தாவாக விளங்குவது தனிச்சிறப்பு.
ரத்தத் தொடர்பில் முக்கியமானதே திருமண பந்தம் எனும் குடும்ப வாழ்க்கை. குடும்ப வாழ்க்கையின் ஆரம்பமாக அமையும் திருமணப் பந்தத்திற்கும் செவ்வாய்க்கும் முக்கிய பங்கு உள்ளது. எனவே தான் திருமணப் பொருத்தத்தில் செவ்வாய் தோஷம் அனைவரையும் பயமுறுத்துவதாக அமைகின்றது.
எல்லோராலும் கேட்கப்படுவதும், பேசப்படுவதும் ஏன் ஜோதிடம் என்றாலே என்ன எனத் தெரியாதவர்களும் கேட்கும் கேள்வி பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதாப சுத்த ஜாதகமாப மாப்பிள்ளைக்கு செவ்வாய் தோஷம் உள்ளது என்பார்கள்.
ஆக செவ்வாய் தோஷம் ஜாதகத்தில் முக்கிய சொல்லாக இருக்கிறது. வாழ்க்கையின் மூலச் சொல்லாக உள்ளது. எனவே செவ்வாய் தோஷம் என்ன என்பதை பார்ப்போம். நிவர்த்தி செய்வதையும் கவனிப்போம்.
திருமண தோஷம்:
அங்காரக தோஷம், ரத்த தோஷம், உறவு தோஷம் என்றெல்லாம் சொல்லும் சொல்லுக்கு செவ்வாய் தோஷம் என ரிஷிமார்கள் பெயர் சூட்டி உள்ளார்கள்.
ஒருவரது ஜனன ஜாதகத்தில் விதி எனப்படும் லக்கினத்திற்கும், மதி எனப்படும் சந்திரனுக்கும் அதாவது ராசிக்கும் சுகம் எனப்படும் சுக்கிரனுக்கும் அந்த ஜாதகத்தில் பதிவாகும் செவ்வாயின் இடத்திற்கும் உள்ள உறவைக் கொண்டுதான் செவ்வாயின் தோஷம் எந்த அளவு ஒருவருக்கு வேலை செய்கிறது என்பதை உணரலாம்.
அந்த வகையில் லக்கினம், ராசியில் சந்திரன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் இருக்கும் இடத்திற்கு, இரண்டாவது இடம், நான்காவது இடம், ஏழாவது இடம், எட்டாவது இடம் என செவ்வாய் எந்த வீட்டில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் எனப்படும்.
மேற்கண்ட 2, 4, 7, 8, 12 என ஐந்து இடங்களில் எங்கிருந்தாலும் செவ்வாய் தோஷம் என்பது பாமரர்களுக்கும் தெரிய வந்ததால் இன்று ஏழைகளும் சுகமாக வாழ செவ்வாயின் அருள் அவசியம் என்பது புரியும். மேலும் 2, 4, 7, 8, 12-ல் பாபக்கிரகங்கள் இருந்தாலும் இதே நிலைதான். இருந்தாலும்  செவ்வாய் மேஷம், விருச்சிகம், மகர ராசிகளில்  இருந்தால் தோஷம்  இல்லை.
மேலும் சூரியன், குரு, சனி ஆகியோருடன் சேர்ந்திருந்தாலோ அல்லது பார்க்கப்பட்டாலே தோஷம் இல்லை. இதே நேரத்தில் செவ்வாய் தோஷ அமைப்பு ஆண் பெண் இரு பாலருக்கும் இருந்தால் தோஷம் இல்லை. மேலும் பல காரணங்கள் தோஷம் இல்லை என்பதை புரிந்து அப்படியும் தோஷம் இருந்தால் அதற்கு எளிய பரிகாரம் உள்ளது.
கடகம், சிம்ம லக்கினமாக இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை. செவ்வாய் 2-ம்மிடம் மிதுனம் அல்லது கன்னியாகில் செவ்வாய் இருக்கும் வீடு 4ம் இடம் மேஷம், விருச்சிகம் என்றாலும் தோஷம் இல்லை. செவ்வாய் 7ம்மிடம் கடகம், மகரமாயின் தோஷம் ஏற்படாது. செவ்வாய் 8ம்மிடம் தனுசு, மீனமாகில் தோஷம் இல்லை.
செவ்வாய் 12மிடம் ரிஷபம், துலாமாக இருந்தால் தோஷம் கிடையாது. சிம்மம் அல்லது கும்பம் இருந்தால் தோஷம் இருக்காது. குருவுடன் இருந்தாலோ சந்திரனுடன் இருந்தாலோ தோஷம் இல்லை. புதனு டன் சேர்ந்து அல்லது பார்க்கப்பட்டால் தோஷம் இல்லை. சூரியனுடன் சேர்ந்து இருந்தாலோ பார்த்தாலே தோஷம் ஏற்படாது.
செவ்வாய் இருக்கும் ராசி அதிபதி 1, 4, 5, 7, 9, 10 இவைகளில் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை. 8, 12ல் உள்ள செவ்வாய் இருக்கும் ராசி மேஷம், சிம்மம், விருச்சிகம் மகரமா யின் தோஷம் ஏற்படாது. தனது வீடு உச்ச வீடு மகரம், மேஷம், விருச்சிகம் தோஷம் இல்லை. சனி, ராகு, கேது இவர்களுடன் கூடியிருந்தால் பார்த்தால் தோஷம் இருக்காது.
செவ்வாய் சனியுடன் சந்திரன், குரு இவர்கள் வீட்டில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையைச்சேர்ந்த விஜய்சுவாமிஜி.
பரிகார இடங்கள்:
பொதுவான எல்லாப் பரிகாரங்களையும் இடம், பொருள், காலம் இந்த மூன்றையும் தெரிந்து கொண்டு தான் செய்ய வேண்டும். இடம் என்பது பரிகாரம் செய்யக் கூடிய இடத்தைக் குறிக்கும். பொருள் என்பது பரிகாரத்திற்கு உதவும் பொருள்களைக் குறிக்கும்.
காலம் என்பது பரிகாரத்திற்கு ஏற்ற காலத்தை குறிக்கும். சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயர் கட்டுக்கள், நீக்கும், அதாவது துக்கஹர பரிகாரங்களை கிருஷ்ண பட்சத்திலும் செய்ய வேண்டும்.
குளக்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை, கோசாலை, சிவாலயங்கள், விஷ்ணு சந்நிதி, பிரும்ம சமூக மத்தி, சமுத்திர க்ஷத்திரம், அருவிக்கரை, குருமுகம், குருபாது காஸ்தலம், குரு ஆலயம் இந்த இடங்களில் எல்லாம் சுபமான பரிகாரங்கள் செய்து நற்பலன்களை நிரம்ப அடையலாம். ஒரு சிலர் பரிகாரங்களை உருத்திர பூமியிலும் செய்வதுண்டு.
பலன் தரும் பரிகாரங்கள்:
துவரை தானம்:
உடைக்காத முழுத்துவரையை சிகப்புத்துணியில் பொதி கட்டிக் கொள்ள வேண்டும், வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், பழம் இவைகளுடன் கண் சிவந்த வேதியரிடம் தானம் கொடுக்க வேண்டும்.
வாழைப்பூத் தானம்:
முழு வாழைப்பூ அதே மரத்தில் காய்த்த பழம், அதே மரத்தில் கிழக்கு நோக்கிய நுனி இலை இவைகளை எடுத்துக் கொண்டு இந்த நுனி இலையில் இவைகளை வைத்துத் தானம் வாங்குபவனை நடு வீட்டில் அமரச் செய்து வெற்றிலைப் பாக்கு, மஞ்சள் துணி இவைகளுடன் தானம் செய்ய வேண்டும். இந்த இரண்டு தானங்களும் திருமணத் தடங்கலைத் தீர்த்து வைக்கும் தானங்கள்.
வழிபாட்டு முறை:
செவ்வாய் தோஷம் ஒரு சிலர் நினைப்பது போல திருமணத் தடங்கலை மட்டும் செய்து போவது அல்ல. பல்வேறு வகையான இடைïறுகளும் இதனால் விளைவதுண்டு.
கோபமான வார்த்தைகளினால் தனக்கு வர வேண்டிய நன்மைகளைத் தானே கெடுத்துக் கொள்வது, கல்யாண வீடுகளில் போன இடங்களில் சண்டையிட்டுக் கொள்வது, கல்யாணக் காரியங்களில் சண்டையிட்டுக் கொள்வது, கல்யாணக் காரியங்கள் பேசப் போனால் தடங்கல் இவராலேயே ஏற்படு வது, இப்படிப் பல கோணங்களில் செவ்வாய் தோஷம் தன்னு டைய குணத்தை வெளிப்படுத்தும்.
இந்த  தோஷத்தைத் தன்னிடத்தில் இருந்து விலக்கி கொண்டு விட்டால் இத்தகு தொல்லைகள் வராது. செவ்வாய் தோஷக்காரர்கள் செவ்வாய்க்கிழமையன்று, காலையில் எழுந்ததில் இருந்து 1 மணி நேரம் மௌனம் இருக்க வேண்டும்.
இந்த மௌனம் இருக்க முடியாத படி எத்தனையோ தடங்கல்கள் வரும். தடங்கல்களைத் தோணியாக்கிக் கொண்டு மேலும் அதிலேயே பயணம் செய்யக் கூடாது. தடங்கல்களை எதிர்த்து நின்று மௌனத்தைக் கடைப்பிடிப்பவன் செவ்வாய் தோஷத்தில் இருந்தே விரைவில் விடுபடுவான்.
செவ்வாய் தோஷக் காரர்கள் முருகப் பெருமானையும், வளம் தரும் வயிரவக் கடவுளையும் விடாது வழிபட வேண்டும். காலையில் முருகனையும், இரவில் வயிரவனையும் வழிபடுவது சாலச் சிறந்தது.  முருகன் கோலங்கள் பலவாக இருந்தாலும் தண்டபாணியாக விளங்கும் கோலம் செவ்வாய்க்குச் சிறப்பு.
வயிரவ வடிவங்கள் வெகுவாக இருந்தாலும் க்ஷத்ரபாலர் என்ற அவதூத வடிவம் சிறப்பானது. முருகனையும் க்ஷத்ர பாலனையும் அன்றாடம் தோத்திரங்களாலும் அர்ச்ச னைகளாலும் வழிபாடு செய்ய வேண்டும் என்கிறார் விஜய்சுவாமிஜி.
பரிகார காலம்:
செவ்வாய்க் கிரகம் அவரவருடைய ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்துக்குரிய கிரகங்களின் நாட்களில் செய்வது சிறப்பு. பொதுவாகச் செவ்வாய்க் கிழமையிலும் செய்யலாம். ஜென்ம நட்சத்திரத்தன்று பரிகாரம் செய்வது ஒத்துக் கொள்ளப்பட்டது. இதைத் தவிர உள்ள சிறப்பு விதிகளை சுக்குல பக்ஷ பரிகாரத்தில் கூறுவோம்.
பரிகாரம் செய்ய  ஆகாத நேரம்:
ஜென்ம நட்சத்திரத்துக்கு நான்கு எட்டு பன்னிரண்டு இந்த நட்சத்திரங்களில் பரிகாரங்கள் செய்வது நல்லதல்ல. இதைப் போல பரிகாரம் செய்து கொள்பவருடைய மனைவியின் நட்சத்திரத்திலிருந்து நான்கு, எட்டு, பன்னிரண்டு இந்த நாட்களிலும் செய்யக் கூடாது.
இதைப் போல இந்த தம்பதியருக்கு மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் நான்கு, எட்டு, பன்னிரண்டு நட்சத்திரங்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top