வவுனியாவில் தொடர்ச்சியாக பொய்து வரும் அடை மழை காரணமாக குளங்களின் நீர் மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளதுடன் அவை உடைப்பெடுத்துள்ளதுடன் கிராமங்களுக்குள்ளும் நீர் புகுந்துள்ளது.
தாண்டிக்குளம், திருநாவற்குளம், சமணங்குளம், கோமரசங்குளம், கந்தசாமிநகர், குடியிருப்பு, புதுக்குளம், பூந்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளதுடன் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் மக்களும் வெளியேறி வருகின்றனர்.
அதன்படி பாவற் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அதன் 6 அவசர வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதால் பூவரசங்குளம் ஊடன செட்டிகுளம் வீதியே இனம் காண முடியாமல் வெள்ளம் நிரம்பி உள்ளது.
குறித்த வீதிக்கு அருகே உள்ள கந்தசாமிநகர், வீடியா நகர் ஆகிய கிராமங்கள் முழுமையாக வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதால் வெளியிட தொடர்புகள் அற்ற நிலையில் காணப்படுகின்றது. அதனால் அங்குள்ள 39 குடும்பங்களையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் நொச்சி மோட்டைப்பாலம் மேவிப்பாய்வதனால் ஏ9 வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. அதன்படி வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இருப்பினும் பெரியளவிலான வாகனங்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஹயெஸ் போன்ற சிறியரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட பொலிஸார் அனுமதிக்கவில்லை எனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக