புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இயக்குனர் ஷங்கர் டென்ஷனானால் என்ன செய்வார் என்பது பற்றிய தகவல் கிடைத்துள்ளது. இயக்குனர் ஷங்கர் விக்ரம், ஏமி ஜாக்சனை வைத்து ஐ படத்தை எடுத்து வருகிறார்.


இந்த படத்திற்காக விக்ரம் உடல் எடையை வெகுவாகக் குறைத்துள்ளார். உடல் எடையை படத்துக்கேற்ப கூட்டுவதும், குறைப்பதும் விக்ரமுக்கு ஒன்றும் புதிதன்று.

சேது படத்தில் அவர் எந்த அளவுக்கு தனது எடையைக் குறைத்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இயக்குனர்கள் என்றால் டென்ஷன் இல்லாமல் இருக்காது.

டென்ஷன் ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி நடந்து கொள்வார்கள். சிலர் அருகில் உள்ளவர்களை திட்டித் தீர்த்துவிடுவார்கள், சிலர் அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்திருப்பார்கள்.

ஆனால் ஷங்கர் டென்ஷனானால் உடனே ஒரு காமெடி படத்தைப் பார்க்க சென்றுவிடுவாராம். நல்ல டெக்னிக் தான், சிரிப்பை வைத்து கோபத்தை விரட்டுகிறாரே ஷங்கர்.
 
Top