புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கடந்த 3 வருடங்களாக பல்வேறு நபர்களால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு வந்த சிறுமியொருவரை கருவெலகஸ்வௌ பொலிஸார் கைது செய்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


குறித்த சிறுமியின் வயது 15 வருடங்களும் 11 மாதங்களும் எனத் தெரிவிக்கப்படுகின்றது . அவர் 2009 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு நபர்களினால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளமையும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

சிறுமியின் தந்தை அவரின் தாயுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் இருவரையும் விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனையடுத்து தாய் சிறுமியின் பாட்டியிடம் அவரை ஒப்படைத்து விட்டு தொழில் நிமித்தம் வெளிநாடொன்றிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில், அச் சிறுமி அவரது மாமா ஒருவரால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

பின்னர் நாட்டிற்கு திரும்பிய சிறுமியின் தாய் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள உறவினரின் வீட்டில் சிறுமியை ஒப்படைத்து விட்டு மீண்டும் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார். இதன்போதும் சிறுமி நபரொருவரால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்திற்கு பின்னர் மீண்டும் நாட்டுக்கு திரும்பியுள்ள சிறுமியின் தாயார் சிறுமியுடன் தப்போவ, தேநுவர பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார். இங்குவைத்தும் மேற்படி சிறுமி பல நபர்களினால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இவ்விடயத்தை அறிந்துகொண்ட பிரதேச வாசிகள் இது தொடர்பாக சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவிற்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த சிறுமியை கைது செய்த பொலிஸார் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலும் சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய நபர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 
Top