1.மேசம்:-மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.ஜனவரி7,8,9குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வர எண்ணுவீர்கள்.உடம்பில் வாயு வாதம் போன்ற தொல்லைகள் வந்து நீங்கும்.நெருப்பு மின்சாரம்,இராணுவத்துறை சார்ந்தவர்கள்,அக்கினி
சம்பந்தமான தொழில்களைச் செய்வோர்கள்,ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,மின்சாரப் பொருட்களின் விற்பனையாளர்கள் மற்றும் காவல் துறை பணி ஆற்றுவோர்கள்,பங்கு வர்த்தகம் போன்ற தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல பலன்கள் அடைவார்கள்.ஜனவரி10,11,12வீடுகளைத் திருத்தி கட்டவதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள்.காணாமற் போன பொருட்கள் காவல் துறையினர்களால் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.புதிய வீடு வாகனங்கள் வாங்குவதற்காக வங்கிகள் மூலம் எதிர் பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்கும். பயணங்களின் போது வாகனங்களில் எச்சரிக்கையுடன் சென்று வருதல் உகந்ததாகும்.தந்தை மகன் உறவில் சுமூகமான சூழல் உருவாகும். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகுந்த கவனமுடன் பேசிப் பழகுதல் நல்லது.ஜனவரி13நீண்ட காலமாக வர வேண்டிய பணம் கை வந்து சேரும் காலமாகும். கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப் படும். தாயின் உடல் நிலை பாதிப்புக்களால் ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் சற்று குறைய வாய்ப்பு உள்ளது.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்ப
இராசியான திசை:தெற்கு
புரிகாரம்:-செவ்வாய் கிழமையில் துர்க்கை வழிபாடு செய்து வரவும்.
2.ரிசபம்:-ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும்..ஜனவரி7மாணவர்கள் கல்வியில் பரிசு மற்றம் பாராட்டுக்களை பெறுவார்கள். விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள் கவனமுடன் இருக்கவும். குடும்பத்தில் தடை பட்டு இருந்த சுப காரிய நிகழ்ச்சிகள் நடை பெறக் கூடிய காலமாகும்.ஜனவரி8,9,10,11பொது பணித்துறை சார்ந்தவர்கள்,அநாதை ஆசிரமங்களை நடத்துவோர்கள்,ஆலயப் பணி புரிபவர்கள்,விஞ்ஞானத்துறை சார்ந்தவர்கள்,கழிவுப் பொருட்களின் வியாபாரிகள்,மீன் முட்டை மாமிசம் போன்ற பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,ஏசன்சி போன்ற நிறுவனங்களை நடத்துபவர்கள்,அணு ஆராய்ச்சி நிலையப் பணியாளர்கள்,விமானப் பணியாளர்கள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவார்கள்.கணவன் மiவி உறவுகள் சுமாராகக் காணப்படும்.வேற்று மதத்தவரால் எதிர் பாராத ஆதாயங்கள் அடைவீர்கள்.தீர்த்த யாத்திரைகள் சென்று வர முயற்சிப்பீர்கள்.பழைய கடன்கள் அடைத்துப் புதியஜனவரி12,13கடன் வாங்குவீர்கள். உற்றார் உறவினர்களின் வரவுகளால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும்.வங்கிகள் மூலம் எதிர் பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்கும்.உடம்பில் எலும்பு மற்றும் நரம்பு சம்பந்தமாகிய பிணிகள் வந்து போகும். பொதுவாக இது ஒரு சுமாரான நற் பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-7
இராசியான நிறம்:-கருஞ்சிகப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் கணபதி ஆலய வழிபாடு செய்து வரவும்.
3மிதுனம்:-மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும்.ஜனவரி7,8,9இரும்பு இயந்திரம்,இரசாயன சம்பந்தமான பொருட்கள் வியாபாரிகள்,பழைய இரும்பு பொருள் வியாபாரிகள்,எண்ணை,பல சரக்கு போன்ற வியாபாரிகள்,அடிமை தொழிற் செய்வோர்கள்,கழிவுப் பொருட்களை வாங்குவோர்கள்,உற வியாபாரிகள் நற் பலன்களை அடைவார்கள். மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன மகிழ்ச்சியை அடைவீர்கள்.தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையால் மனநிம்மதி குறையலாம். ஜனவரி10,11பொது நலத் தொண்டுகளில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். வெளி நாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர் பார்க்கலாம்.துலை தூரப் பயணங்கள் மூலம் எதிர் பார்த்து இருந்தவர்களை சந்தித்து அவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.குழந்தைகளுக்காகத் திடீர் மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.பணப் புழக்கம் சுமாராக க்hணப்படும்.வீட்டில் கவனமுடன் இருந்தால் திருடு போவதைத் தவிர்க்கலாம்.ஜனவரி12,13உற்றார் உறவினர்களால் ஆதாயம் இல்லை. நாட் பட்ட வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். அரசியல் வாதிகளால் ஆதாயம் இல்லை.காதல் விசயங்களில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லது.புதிய நண்பர்களின் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-சனிக்கிழமையில் சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.
4.கடகம்:-கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும்.ஜனவரி7,8குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடை பெற வாய்ப்பு உள்ளது..படித்த வேலை இல்லாத ஈளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும். தாயின் உடல் நிலையில் இருந்து வந்த தொல்லைகள் குறைந்து காணப்படும்.பழுது பட்ட வீடு மற்றும் வாகனங்களை புதுப்பிப்பதன் மூலம் பொருட் செலவுகள் வந்து சேரும்.ஜனவரி9,10,11,12உடம்பில் நரம்பு மற்றும் எலும்புகள் போன்ற உபாதைகள் வந்து போகும்.மற்றவர்களை நம்பிப் பணம்,பொருட்கள் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். இரும்பு இயந்திரம் இரசாயன சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், பழைய இரும்பு பொருள் வியாபாரிகள்,எண்ணை,பல சரக்கு போன்ற வியாபாரிகள்,அடிமைத் தொழிற் செய்வோர்கள்,கழிவுப் பொருட்களை வாங்குவோர்கள்,உற வியாபாரிகள் ஆகியோர்கள் நல்லபலனை அடைவார்கள்.ஜனவரி13குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வர வாய்ப்பு உள்ள காலமாகும். குடும்பத்தில் காரணமற்ற மனக் குழப்பங்களும் மற்றும் கடன் தொல்லைகளும் ஏற்படலாம்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-சனிக் கிழமையில் ஐயப்பன் வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.
5.சிம்மம்:-சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.ஜனவரி7,8மற்றவர்களின் காரியங்களில் அநாவசியமாகத் தலையிட்டு மன நிம்மதியை இழக்காதீர்கள்.விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு உள்ள காலமாகும்..புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள். ஜனவரி9,10வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதற்காகப் புதிய கடன்களை வாங்க முயற்சிப்பீர்கள்.தீர்த்த யாத்திரைகள் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள்.உடல் நிலையில் சுரம் மற்றும் உஷ்ண சம்பந்தமாகிய பிணிகள் வந்து போகலாம். கண்களில் கவனமுடன் இருக்கவும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி ஓரளவு முன்னேற்றம் காணப்படும்.தேவையற்ற மனசஞ்சலம் தவிர்த்தல் நல்லதாகும். வங்கிகளில் இருந்து நீண்ட காலமாக எதிர் பார்த்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் கை வந்து சேரும்.ஜனவரி11,12,13பூஜைப் பொருள் வியாபாரிகள்,மன நலக் காப்பகங்களை நடத்துவோர்கள்,தாய் சேய் நல விடுதிகளைச் சார்ந்தவர்கள்,உப்பு உர வியாபாரிகள்,மருந்து சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,நீர் வளத்துறை சார்ந்தவர்கள்,தண்ணீர்,கூல்டிரிங்ஸ் மற்றும் திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவார்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.
6.கன்னி:-கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்..ஜனவரி7,8புதிய ஆடை அணிகலன்களை வாங்குவதற்காகப் புதிய கடன்களை வாங்க முயற்சிப்பீர்கள்.நாட்பட்ட பழுது பட்ட ஆலயங்களைத் திருத்திக் கட்டும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். பூர்வீகச் சொத்து விசயமான பிரச்சனைகள் தீர இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.ஜனவரி9,10ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவுவதின் மூலம் மன நிம்மதியும் பொது மக்களின் பாராட்டுக்களையும் பெறுவீர்கள்.ரேஸ் லாட்டரி போன்ற விசயங்களின் மூலமாகத் திடீர் தன வரவு உண்டாகலாம்.நண்பர்களின் வீட்டுச் சுப காரிய நிகழச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள். நறுமணப் பொருள்கள் மற்றும் கம்யுட்டர் துறை சார்ந்தவர்கள்.பூ பழம்,பூஜை சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,அறநிலையத் துறை சார்ந்தவர்கள்,அநாதை ஆசிரமங்களை நடத்துவோர்கள்,இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன்அடைவார்கள்.ஜனவரி11,12,13அநாதைச் சிறுவர்கள் மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கான பணிகளில் ஈடு பட்டு நற் பெயர் எடுப்பீர்கள். குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக உல்லாசப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். குடும்பத்தில் தடை பட்டு வந்த சகோதர சகோதரிகளின் திருமண காரியங்கள் நிறைவேறும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:வடகிழக்கு
பரிகாரம்:-வியாழக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.
7.துலாம்:-துலாம் ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும்.ஜனவரி7,8,9நண்பர்களின் சுப காரிய விசயங்களுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள்.கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றமையுடன் இருப்பார்கள்.கணவன் மனைவியின் உறவுகள் சுமாராகக் காணப்படும்.செய்யாத குற்றங்களுக்காகப் பழிச் சொல் ஏற்பட இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல் படுவது நல்லது.ஜனவரி10,11குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் சற்று குறையும். காதல் விசயங்களில் எதிர் பார்த்து இருந்த நல்ல தகவல்கள் வந்து சேரும்.வெகு நாட்களாகத் தடை பட்டு வந்த திருமண காரியங்கள் நிறைவேற வாய்ப்பு உள்ள காலமாகும்..நாட் பட்ட வராத கடன் கொடுத்து இருந்த பணம் திரும்ப கைக்கு வந்து சேரும்.ஜனவரி12,13தோல் சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இற்குமதி செய்வோர்கள்,கழிவுப் பொருட்களை வாங்குவோர் விற்போர்கள்,அணு ஆராய்ச்சி துறை சார்ந்தவர்கள்,மீன் முட்டை மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,வட்டித் தொழில்,தரகு ஏஜன்சி கமிசன் போன்ற தொழிற் செய்வோர்கள்,பழைய இரும்பு,பழைய பேப்பர்,பிளா~;டிக் போன் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.அரசியல் வாதிகளுக்கு எதிர் பாராத ஆதாயங்கள் உண்டாகும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-4
இராசியான நிறம்:-கருப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் பிதுர் வழிபாடு செய்து வரவும்.
8.விருச்சிகம்:-விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.ஜனவரி7,8,9,10காதல் சம்பந்தமான விசயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வுது நல்லதாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய இட மாற்றம் ஏற்படலாம்.எழுத்துத் துறைகள்அச்சுத் தொழில்கள்,புத்தகம், நோட்டு வியாபாரிகள்,வக்கீல்கள்,எழுத்தாளர்கள்,கவிஞர்கள் பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள்,தபால் தந்தித் துறையைச் சார்ந்தவர்கள்,ஸ்டேசனரி சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,நாடகக் கலைஞர்கள் ஆகியோர்கள் நல்ல பலன் அடைவீர்கள்.ஜனவரி11,12நண்பர்களால் எதிர் பாராத பொருட் செலவுகளும் மன நிம்மதிக் குறைவும் ஏற்படலாம்.உடம்பில் வாயு மற்றும் வாத சம்பந்தமான பிணிகள் வந்து போகலாம். பெண்களால் தென் கிழக்குத் திசையில் இருந்து எதிர் பாராத தன வரத்து உண்டாகும்.யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் எதிர்பாராத சில நன்மைகளை அடைவீர்கள்.ஜனவரி13வெகு காலமாகக் காணாமற் போன பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்ப கிடைக்கும.உற்றார் உறவினர்களால் ஆதாயம் இல்லை.யாத்திரையின் போது மிகுந்த கவனமுடன் பயணம் செய்வது நல்லதாகும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
புரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.
9.தனுசு:-தனுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.ஜனவரி7,8அரசு வழக்கு சம்பந்தமான விசயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைப்பதற்கு இன்னும் சற்று கால தாமதங்கள் ஏற்படலாம்.குல தெய்வ வழிபாடு செய்து வருவீர்கள்.வெளி நாட்டில் வசிப்பவர்கள். வர வேண்டிய கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் ஆதாயம் உண்டு. ஜனவரி9,10ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள்,சினிமா மற்றும் நாடகத் துறை சார்ந்தவர்கள்,அரசியல் வாதிகள்,கார் லாரி போன்ற வாகன சம்பந்தமான தொழிற் செய்வோர்கள்,வாகன ஓட்டுனர்கள்,அழகுகலைக் கூடங்களை நடத்துபவர்கள்,நவ ரத்தின வியாபாரிகள்,திருமணத் தகவல் மையங்கள் மற்றும் திருமணக் கூடங்களை நடத்துபவர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். நாட் பட்ட தீராத நோய்க்குப் புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடிச் செல்லுவீர்கள்.ஜனவரி11,12,13வெகு காலமாக விட்டுப் போன குல தெய்வ வழிபாடு செய்வதற்கும்,தாய் நாடு சென்று திரும்புவதற்கும் வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி உறவுகளில் சற்று எச்சரிக்கையுடன் முன் கோபத்தை தவிர்த்து இருப்பது நல்லதாகும்.சூதாட்டங்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்கள் ஏமாற்றம் அடையாமல் இருக்கவும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியதன திசை:தென்கிழக்கு
பரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.
10.மகரம்:-மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்குச் செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.ஜனவரி7,8உத்தியோக துறையினர்கள் மேலதிகாரிகளிடம் மிகுந்த கவனமுடன் பணி ஆற்றுதல் நல்லது யாத்திரைகளில் வண்டி வாகனங்களில் தேவை இல்லாத வீண் பிரச்சனைகள் உருவாக இருப்பதால் கவனமுடன் சென்று வரவும். உத்தியோகத்தில் வெகு காலமாக எதிர்பார்த்து இருந்த பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் கிடைக்க கூடிய காலமாகும்.ஜனவரி9,10நெருப்பு,மின்சாரம், இராணுவத்துறை சார்ந்தவர்கள்,அக்கினி சம்பந்தமான தொழிற் செய்வோர்கள்,
ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,மின்சாரப் பொருட்களின் விற்பனையாளர்கள் மற்றும் காவல் துறையை சார்ந்த பணி ஆற்றுவோர்கள்,பங்கு வர்த்தகம் போன்ற தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நற் பலன் அடைவார்கள்.ஜனவரி11,12,13புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் வாங்குவதன் மூலம் பொருட் செலவுகள் உண்டாகலாம்.கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் தீர்ந்து ஒற்றுமை உண்டாகும். அண்டை அயலார்களிடம் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது.குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வரப் போட்ட எண்ணங்கள் நிறைவேறும் காலமாகும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் முருகன் ஆலய வழிபாடு செய்து வரவும்.
11.கும்பம்:-கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.ஜனவரி7,8,9தந்தைக்கு ஏற்பட்டுவந்த மருத்துவச் செலவுகள் சற்றுக் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளது.குடும்பத்தில் தடை பட்ட திருமண காரியங்களில் நண்பர்களின் உதவியால் நடை பெறலாம்.தேவையற்ற மன சஞ்சலம் தவிர்த்து ஆலயங்களுக்குச் சென்று வருவது நல்லது.பிள்ளைகளால் பொருட் செலவுகளும் மன நிம்மதியும் குறைய இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. ஜனவரி10,11அரசியல் வாதிகளால் ஆதாயம் இல்லை.மாணவர்கள் கல்வியில் சில தடைகள் வந்து விலகும்.ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் ஏற்படலாம். சூதாட்டம் போன்ற விசயங்களில் பணம் பொருள் கிடைக்கும் என்று எண்ணி ஏமாற்றம் அடைய வேண்டாம்.ஜனவரி12.13 வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் நல்ல செய்திகள் கிடைக்கும். எழுத்துத் துறை,கல்வித்துறை ஆசிரியர்கள் இவற்றில் பணி புரிவோர்கள்,அச்சுத் தொழில்கள்,புத்தகம் நோட்டு வியாபாரிகள்,வக்கீல்கள்,எழுத்தாளர்கள்,கவிஞர்கள் பாடலாசிரியர்கள்,இசையமைப்பாளர்கள்,தபால் தந்தித் துறையைச் சார்ந்தவர்கள்,ஸ்டேசனரி சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,நாடகக் கலைஞர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
புரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவஷ்;ணு வழிபாடு வெய்து வரவும்.
12.மீனம்:-மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும்.ஜனவரி7,8,9,10பழுது பட்ட வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதன் மூலமாக பொருட் செலவுகள் உண்டாகும்.சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் நல்ல தகவல்கள் வந்து சேரும் காலமாகும். தீர்த்த யாத்திரை மற்றும் குல தெய்வ வழிபாடு செய்து வர முயற்சிப்பீர்கள்.நாட் பட்ட தீராத வியாதிகள் தீர வேண்டி புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடுவதன் மூலம் பொருட் செலவுகள் உண்டாகலாம். ஜனவரி11,12ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,சிற்றுண்டி உணவு விடுதிகளை நடத்து
வோர்கள்,அரசியல் வாதிகள்,மருந்து உற்பத்தி மற்றும் விற்பனைகளைச் செய்வோர்கள்,வெளி நாட்டுத் தூதுவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.காதல் விசயங்களில் எதிர் பார்த்து இருந்த நல்ல செய்திகள் வந்து சேரும்.பொது நலத் தொண்டுகளில் ஈடு பட்டு நற் பெயரும்,மன நிம்மதியும் அடைவீர்கள்.ஜனவரி13கணவன் மனைவி உறவுகளில் சிற்சில கருத்து வேறுபாடுகள் வந்த விலகும். உற்றார் உறவினர்களின் வரவால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும்.சுப காரிய சம்பந்தமான முயற்சிகளில் ஈடு பட வாய்ப்பு உள்ளது.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும். தொடரும்!
0 கருத்து:
கருத்துரையிடுக