கேரள மாநிலம் கொச்சி மாவட்டத்தில் 12 வயது சிறுவன் ஒருவனை பலவந்தப்படுத்தி அவனுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட 42 வயது பெண் பற்றிய செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில்
கூறப்படுவதாவது-
கேரளா, எர்ணாகுளம் மாவட்டம், வடக்கே காட்டை சேர்ந்தவர் ஷாகிதா, (வயது 42). கணவரால் கைவிடப்பட்டவர். இவரின், மூன்று குழந்தைகளும் கணவருடன் வசிக்கின்றனர். தனியே வசித்து வந்த இவருக்கு, பக்கத்து வீட்டைச் சேர்ந்த, ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவன், வீட்டுப் பொருட்கள், காய்கறி வாங்கி தருவது உட்பட, பல உதவிகளை செய்து வந்தான். சம்பவத்தன்றும், காய்கறி வாங்கிக்கொடுப்பதற்காக அந்த சிறுவன் அங்கு சென்றான்.
அப்போது ஷாகிதா சிறுவனை தன்னுடைய படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று அவனுடன் பலவந்தமாக செக்ஸ் உறவு வைத்துக் கொண்டிருக்கிறார். கடந்த மாதம் (டிசம்பர்) 11-ந்தேதி இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அதன்பிறகு, மன உளைச்சலால் அந்த சிறுவன் பள்ளிக் கூடத்திற்கு செல்லவில்லை.
அது குறித்து பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் சிறுவனை அழைத்து விசாரித்தபோது, அவனை ஷாகிதா பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. ஆனால், இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுக்காமல், இரு தரப்பினரிடமும் சமாதானம் பேசி மூடிமறைக்க முயற்சி நடைபெற்றது.
இந்த நிலையில் எதிர்பாராத திருப்பமாக, இந்த சம்பவம் குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் 'போஸ்டர்' அடித்து ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த பரவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல் சலாம் இதையட்டி சிறுவனின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து ஷாகிதாவின் 'செக்ஸ்' சித்ரவதை குறித்து சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாகிதாவை கைது செய்தனர்.
அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 377-வது பிரிவின் கீழ் (சிறுவர்கள் 'செக்ஸ்' குற்ற தடுப்பு) வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக