புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நொய்டாவில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்த 21 வயது பெண் தனது வீட்டுக்கு அருகே நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்துள்ளார். நொய்டாவில் உள்ள சோட்பூர் காலனியைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் செக்டர் 65ல் உள்ள
ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு வேலையை முடித்துவிட்டு தன்னுடன் பணிபுரியும் 4 பெண்களுடன் வீட்டுக்கு கிளம்பியுள்ளார். சோட்பூர் காலனியை அடைந்ததும் பிற பெண்கள் பிரிந்து செல்ல அவர் மட்டும் தனியாக தனது வீட்டை நோக்கி சென்றுள்ளார். ஆனால் அவர் வீட்டுக்கு செல்லவில்லை. இரவு 10 மணி ஆகியும் வீட்டுக்கு வராததால் அவரது குடும்பத்தார் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துவிட்டு போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் போலீசார் புகாரை எடுத்துக்கொள்ள மறுத்ததாக அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று காலை செக்டர் 63ல் உள்ள புஷ்டா பகுதியில் அவர் ஆடையின்றி பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருடைய உடல் முழுவதும் காயங்கள் இருந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் இரண்டு பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top