புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தாண்டு டஜன் கணக்கில் ரிலீஸ் ஆக இருந்த பொங்கல் படங்கள் வழக்கம் போல் தியேட்டர்கள் பற்றாக்குறையால் கடைசி நேரத்தில் பின்வாங்கிவிட்டது. இதனால் இந்த பொங்கலுக்கு வெறும் 5 படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆக
இருக்கிறது. அதில் கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன், விஷாலின் சமர், சந்தானத்தின் கண்ணா லட்டு திண்ண ஆசையா போன்ற படங்கள் அடங்கும்.

அலெக்ஸ் பாண்டியன்: சுராஜ் இயக்கத்தில் கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் ஆகியோரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் அலெக்ஸ் பாண்டியன். பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தை கார்த்தியின் ஆஸ்தான தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள பேட் பாய்ஸ் பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பொங்கல் விருந்தாக நாளை(11ம் தேதி) உலகம் முழுக்க ரிலீஸ் ஆகிறது. தமிழகத்தில் சுமார் 400 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

சமர் : விஷாலை வைத்து தீராத விளையாட்டு பிள்ளை படத்தை இயக்கிய திரு, மீண்டும் விஷாலுடன் கூட்டணி அமைத்துள்ள படம் சமர். இப்படத்தில் விஷால் உடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் த்ரிஷா. இன்னொரு நாயகியாக சுனைனா நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆரம்பத்திலேயே தலைப்பு பிரச்னையில் சிக்கி பின்னர் சமர் என்ற பெயரில் மாறி, கடந்த டிசம்பர் 21ம் தேதியே ரிலீஸ் ஆக இருந்து, பின்னர் பின்வாங்கி இந்த பொங்கலுக்கு வர இருக்கிறது. தமிழகம் முழுவதும் ஜன 13ம் தேதி சுமார் 300 தியேட்டர்களில் இப்படம் வெளியாக இருக்கிறது.

கண்ணா லட்டு தி்ண்ண ஆசையா : இதுவரை காமெடி நடிகராக இருந்து வந்த சந்தானம் முதன்முறையாக ராமநாரயணன் உடன் தயாரிப்பாளராகவும் ப்ளஸ் ஹீரோவாகவும் அறிமுகமாகியுள்ள படம் தான் கண்ணா லட்டு திண்ண ஆசையா. இப்படத்தில் சந்தானத்துடன் பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசன், சேது என்ற புதுமுகம் ஆகியோர் நடிக்கின்றனர். ஹீரோயினாக விஷாகா சிங் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இப்படம் ரிலீஸ் ஆகும் தருணத்தில் சர்ச்சையில் சிக்கியது. இப்படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் ஒருவரும், படத்தின் முழு கதையே தன்னுடைய படமா இன்று போய் நாளை வா படத்தின் அப்பட்டமான காப்பி என்று பாக்யராஜூம் புகார் கூறியுள்ளனர். இந்தப்படமும் இந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது.

புத்தகம் : ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோவாக அறிமுகமாகியுள்ள படம் புத்தகம். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி நடிக்கிறார். சின்னத்திரை புகழ் விஜய் ஆதிராஜ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அவதரித்துள்ளார். இப்படமும் ப‌ொங்கல் விருந்தாக வர இருக்கிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top