சுவீடனில் மிக தீவிரமான விவாதம் நடந்து கொண்டிருந்த போது, ஆபாச காட்சிகள் தோன்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுவீடன் நாட்டில் செயல்படும் 24 மணிநேர தொலைக்காட்சி நிலையம் சிரியாவில் நடக்கும் போர் குறித்து விவாதத்தை ஒளிபரப்பியது.
இதில் 2 பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். இதை மக்கள் பலரும் பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது பின்புற திரையைில் திடீரென்று பெண் ஒருவர் நிர்வாணமாக தோன்றினார். இதனை தொடர்ந்து ஆபாச காட்சிகள் ஓடியதை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
சுமார் 10 நிமிட நேரம் ஆபாச காட்சிகள் நீடித்த காரணத்தினால், தொலைக்காட்சி நிலையத்திற்கு தொடர் புகார்கள் வந்தன.
இதற்கிடையே தொலைக்காட்சி நிலையத்தினர் ஆபாசப்பட ஒளிபரப்பை துண்டித்தனர்.
இதுகுறித்து நிர்வாகி கூறுகையில், நிகழ்ச்சி தொகுப்பை கிளிக் செய்த போது எதிர்பாராதவிதமாக காட்சி இடம்பெற்றுவிட்டது. இனி இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாதவாறு பார்த்து கொள்வோம் என்று தெரிவித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக