பாலாவின் பரதேசி மார்ச் 15ல் வெளியாகிறது
கொலிவுட்டில் பாலாவின் பரதேசி படம் மார்ச் 15ம் திகதி வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரதேசி படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், தனது டிவிட்டர் பக்கத்தில் பரதேசி திரைப்படம் மார்ச் 15ம் திகதி வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.
பாலாவின் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் கதைக் களம் தேயிலைத் தோட்ட விவசாயிகளின் வாழ்க்கை நிலையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
பரதேசி திரைப்படம் மூலமாக தேயிலைத் தோட்ட விவசாயிகளின் வாழ்க்கை முறையை படம்பிடித்து கண் முன் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் பாலா.
இப்படத்தில் தன்சிகாவும் மற்றும் வேதிகாவும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
செழியன் தனது காமெரா மூலமாக தேயிலைத் தோட்டங்களுக்குள் ஒளிந்துள்ள தொழிலாளர்களின் வாழ்க்கையை மிக அழகாக படம்பிடித்துள்ளார்.
இப்படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்திருப்பது படக்குழுவினரின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக