மீண்டும் புதுப்படத்தில் இணையும் விஜய்-முருகதாஸ் வெற்றிக்கூட்டணி
கொலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படம் வெற்றிகரமாக ஓடியது.
ரூ.100 கோடியை தாண்டி வசூல் சாதனையும் படைத்துள்ளது.
இதையடுத்து மீண்டும் புதுப்படத்தில் இருவரும் இணைகிறார்கள்.
விஜய்யை வைத்து திரும்பவும் படம் இயக்குவதை ஏ.ஆர். முருகதாஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து முருகதாஸ் கூறுகையில், நானும் விஜய்யும் சில தினங்களுக்கு முன் பேசினோம். அப்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டது.
இந்த படம் ‘துப்பாக்கி’யின் இரண்டாம் பகுதியாக இருக்காது. ஆனால் வித்தியாசமான கதையாக இருக்கும் என்றார்.
‘துப்பாக்கி’ படத்தை முருகதாஸ் இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். அந்த படம் முடிந்ததும் விஜய் பட வேலைகளை தொடங்குகிறார்.
0 கருத்து:
கருத்துரையிடுக