புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரிட்டனில் கடந்த 1960ஆண்டுகளில் மகளிரின் கர்ப்பகாலத்தில் ஏற்படுத்தும் மயக்கம், வாந்தி, தலைசுற்றல் போன்றவற்றிக்கு கொடுத்த தாலிடோமைட்(Thalidomide) மருந்தால் ஏறத்தாழ
இரண்டாயிரம் குழந்தைகள் ஊனமாகப் பிறந்துள்ளனர்.
பெண்களின் வலிப்பு நோய், வலி, மனஅழுத்தம் ஆகியவற்றிற்காகக் கொடுத்த எப்பிலிம்(Epilim) மருந்து குழந்தைகளின் மனநலத்தைப் பாதித்துள்ளது.

எப்பிலிம் என்ற இந்த மருந்து 1973ம் ஆண்டு பிரிட்டனில் அறிமுகமானது. ஒவ்வொரு ஆண்டும் எண்ணூறு குழந்தைகள் இந்த மருந்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து ஆட்டிசம் என்ற நோய்யுடனும், மூளைக் கோளாறுடனும், சில குழந்தைகள் தம் முதுகெலும்பு ஒரு பகுதி வெளியே தெரியும்படியும் பிறந்துள்ளன.

கேரன் பக்(Karen Buck) என்ற தாய் இதுபோன்ற பாதிப்புடைய பிரிட்ஜட்(Bridget) என்ற தனது 14 வயதுப் பெண்ணைக் கொஞ்சும் பொழுதுதெல்லாம் இதுவே கடைசி முறையாக இருக்குமோ என்ற அஞ்சியபடி இருக்கிறார். ஏனெனில் பிரிட்ஜட் இன்னும் சில வாரங்களில் இறக்கப் போவது உறுதியாகியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top