சீனாவின் வடிவமைப்பில் புதிய டைட்டானிக்
அவுஸ்திரேலியா பணக்காரரின் செலவில் உருவாக உள்ள டைட்டானிக் கப்பலை சீனாவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனமொன்று வடிவமைக்கிறது.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பில்லியனர் கிளைவ் பால்மர், டைட்டானிக் கப்பலை உருவாக்குவதாக அறிவித்திருந்தார்.
நேற்று நியூயார்க்கில் உள்ள இன்டர்பிட் சீ அருங்காட்சியகத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது பேசிய அவர், டைட்டானிக்கை கட்டும் பணி சீனாவில் விரைவில் தொடங்க இருப்பதாகவும் இது, 2016ம் ஆண்டில் முடிவடைந்து கப்பல் பயணத்தை தொடங்குமென கூறினார். இந்தக் கப்பலின் முதல் பயணத்தின் டிக்கெட்டுகளை வாங்க 40 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
டைட்டானிக் கப்பலைப் போலவே இந்த புதிய கப்பலும் இங்கிலாத்தில் உள்ள சவுத்ஹெம்டன் பகுதியிலிருந்து அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் வரை முதல் பயணத்தை மேற்கொள்ளும். இந்த கப்பலில் பயணிப்பவர்கள் அனைவரும் 1912ம் ஆண்டில் இருந்த பழைய பாணி உடைகளை அணிவார்கள்.
அவர்களுக்கு டைட்டானிக் கப்பலில் வழங்கப்பட்ட அதேவிதமான உணவுகளே பரிமாறப்படும் என்பது கூடுதல் தகவல்கள் ஆகும்.
0 கருத்து:
கருத்துரையிடுக