புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து 1,500 கி.மீ.தொலைவில் அமைந்துள்ள செலியாபின்ஸ்க் பகுதியில், விண்கல் விழுந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கால்பந்து மைதானத்தின் பாதி அளவு கொண்டதாக உள்ள விண்கல், இன்று இரவு பூமியை கடந்து செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரஷ்யாவில் அக்கல் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விண்கல் விழுந்தநேரத்தில் மிகப்பெரிய வெடி சப்தம் கேட்டதாகவும் புகைமண்டலத்துடன் கூடிய தீப்பிழம்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

யூரல் என்ற பகுதியில் விழுந்த விண்கல் காரணமாக வீடுகளில் உள்ள கண்ணாடிகள் மற்றும் மேற்கூரைகள் விழுந்தன. இதனால் 500க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர். மேலும் செல்போன் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top