புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இங்கிலாந்தில் ஒரு நபர் சிறை தண்டனையை முடித்து விட்டு வெளியே வரும்போது பெண்ணாக காட்சி தந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.


இங்கிலாந்தின் கென்ட், மெய்ட்ஸ்டோனைச் சேர்ந்தவர் ராபர்ட் ஹில்டன். 1992ம் ஆண்டு இவர் கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். சமீபத்தில் அவர் தண்டனை முடிந்து விடுதலையானார். உள்ளே போகும் போது ராப்ர்ட்டாக அதாவது ஆணாக போனவர், தற்போது வெளியே வரும்போது ரிபெக்காவாக அதாவது பெண்ணாக திரும்பியுள்ளார்.

ராபர்ட் சிறைக்குப் போன காலம் ரொம்பப் பழசாக இருந்தது உலகம். ஜான் மேஜர் பிரதமராக இருந்தார். பேஜர் தான் அப்போது எங்கு பார்த்தாலும். மொபைல் போன்கள் செங்கல் சைஸில் இருந்தன. இன்டர்நெட் பிரபலமாகவில்லை. இமெயில் பிரபலமாகவில்லை. டிவிட்டர் கிடையாது, பேஸ்புக் கிடையாது. ஆனால் இப்போது உலகமே மாறிப் போய் விட்டது.. ராபர்ட்டும் ரிபெக்காவாகி விட்டார்.

சிறையில் என்னதான் நடந்தது... சிறு வயதிலிருந்தே தான் ஒரு பெண் என்ற உணர்வுடன் வளர்ந்து வந்தார் ராபர்ட். அதற்கேற்ப அவரது உடலிலும் மாற்றங்கள் இருந்தன. இருந்தாலும் இதை அப்போது அவர் பெரிதாக கவனிக்கவில்லை. மேலும் சமூக ரீதியாகவும் அவர் பல பிரச்சினைகளை சந்தித்து வந்தார். இந்த நிலையில்தான் 1992ம் ஆண்டு அவர் கொலை வழக்கில் சிக்கி சிறைக்குப் போய் விட்டார். பல வருடத்தை சிறையில் கழித்த அவர் 2011ம் ஆண்டு பாலின மாற்று அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டார். முழுமையான பெண்ணாக மாறினார். சமீபத்தில் அவர் விடுதலையானார்.

பல காலம் ஆண்கள் சிறையில் இருந்த அவர் பாலின மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் பெண்கள் சிறைக்கு மாற்றப்பட்டார். இரு சிறைகளிலும் இருந்த காலத்தை மிகவும் கஷ்ட காலம் என்று சொல்கிறார் ராபர்ட். சிறையில் தான் பல சோதனைகளை சந்திக்க நேரிட்டதாகவும், மிகுந்த மன வலியுடனும், வலிமையுடனும் அதை சந்தித்து சமாளித்ததாகவும் கூறுகிறார் ராபர்ட் என்கிற ரிபெக்கா.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top