புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் பூங்காவில் சுற்றி திரியும் காதல் ஜோடியினருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்படும் என்று பஜ்ரங்தன் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். அதன்படி அவர்கள் பல்வேறு இடங்களில் 3
ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தனர். 10 ஜோடிகளுக்கு கவுன்சிலிங் நடத்தி எச்சரித்து அனுப்பினர்.

ஐதராபாத் சாய்பாபா கோவிலில் ராஜு- கவுதமி ஜோடிக்கு பஜ்ரங்தன் அமைப்பினர் தாலி கட்ட வைத்து திருமணம் செய்து வைத்தனர். உண்மையில் இருவரும் அண்ணன் தங்கை ஆவார்கள்.

அதாவது கவுதமி ராஜூவின் சித்தி மகள். சாமி கும்பிட கோவிலுக்கு வந்திருப்பதாக அவர்கள் எடுத்துக் கூறியும் பஜ்ரங்தன் தொண்டர்கள் நம்பாமல் அவர்கள் கையில் தாலியை கொடுத்து திருமணம் செய்து வைத்தனர்.

இதை அறிந்த அவரது பெற்றோர்களும், உறவினர்களும் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தெரிவித்திருந்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top