புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் மதன் (25)
. ஆரணியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இதே கிராமத்தை
சேர்ந்தவர் ரதி (17). ஆரணியில் ரெடிமேட் கடையில் வேலை செய்கிறார். (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.) ஒரே கிராமத்தை சேர்ந்த இவர்கள் தினமும் ஆரணிக்கு பஸ்சில் வந்து செல்வார்கள். 6 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையறிந்து இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மதனுடன் பழகுவதை நிறுத்துமாறு ரதியின் பெற்றோர் கூறினர். ஆனாலும், அவர் கேட்கவில்லை. இதனால், அவசர அவசரமாக வேறு ஒரு வாலிபருடன் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணின் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.

ஆனாலும், காதலனை மறக்க முடியாமல் தவித்தார் ரதி. இந்நிலையில், அரசு திருமண நிதி உதவி பெறுவதற்கு போட்டோ எடுப்பதற்காக புதுமண தம்பதியர் நேற்று முன்தினம் ஆரணியில் உள்ள ஸ்டுடியோவுக்கு வந்தனர். சிறிது நேரம் காத்திருக்குமாறு கணவனிடம் கூறிவிட்டு வெளியே சென்றார் ரதி. தனது காதலனை போனில் தொடர்பு கொண்டு அழுதார். திருமணம் என்ற சடங்கு நான் விரும்பாமலேயே எனக்கு நடந்துவிட்டது. உன்னை மறக்க முடியவில்லை. நீ இல்லாமல் என்னால் இந்த உலகில் வாழ முடியாது. உடனே வா என அழைத்துள்ளார். தொடர்ந்து அவர் நச்சரித்ததால், வேறு வழியின்றி காதலன் அவரை பார்க்க வந்தார். காதலனை வெகு நாட்களுக்கு பிறகு பார்த்த மகிழ்ச்சியில் அவரை அணைத்துக் கொண்டு அழுதார் ரதி.

இதை கணவன் மதன் பார்த்துவிட்டார். ஆத்திரம் அடைந்தார். இதுபற்றி வீட்டில் எல்லாரிடமும் கூறினார். அவர்கள் சென்று பெண்ணை காதலனிடம் இருந்து பிரித்து அழைத்து வந்து வீட்டில் அடைத்தனர். தகவல் கிடைத்து வந்த ஆரணி தாலுகா போலீசார், பெண்ணை மீட்டனர். எல்லாரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து போலீசார் பேசினர். காதலனுடன் தன்னை சேர்த்து வைக்குமாறு கூறினார் ரதி. ‘காதலித்தது உண்மைதான். இப்போது வேறொருவருடன் கல்யாணமாகிவிட்டது. அவளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்றார் காதலன். வேறு ஒருவரை காதலித்து என் கண் முன்னே அவனை அணைத்தபடி கதறுகிறாள். அவள் இனி தேவையில்லை’ என்றார் கணவன். எப்படி பஞ்சாயத்து செய்வது என்று போலீசார் குழம்பினர். ‘நாங்களே பேசி தீர்த்துக் கொள்கிறோம்’ என்று கூறி சென்றிருக்கிறார்களாம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top