சென்னையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு
கணவரும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
அசோக் நகரை சேர்ந்தவர் லாவண்யா (வயது 32). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சீனிவாசன் (34) என்பவருக்கும் 9 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.
இந்த நிலையில்சீனிவாசன் நேற்று லாவண்யாவைப் பார்க்க அவரது அலுவலகத்திற்குச் சென்றார். இருவரும் வரவேற்பரையில் பேசிக்கொண்டிருந்த போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சீனிவாசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லாவண்யாவின் கழுத்தில் அறுத்தார். இதைப் பார்த்த அவரது சக ஊழியர் கிளமெண்ட் என்பவர் தடுக்க முயற்சி செய்யவே அவரையும் கத்தியால் குத்தினார் சீனிவாசன்.
இதனையடுத்து தன்னுடைய கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டார் சீனிவாசன். இதைப் பார்த்த மற்ற ஊழியர்கள் விரைந்து வந்தனர். ரத்த வெள்ளத்தில் இருந்த சீனிவாசன், லாவண்யா மற்றும் கிளமெண்ட் ஆகியோரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிளமெண்ட் லேசான காயத்துடன் தப்பினார். சீனிவாசனும், லாவண்யாவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக