புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக, நெரிசல் அதிகரித்து விட்டதால், பூமிக்கடியில் குடியிருப்புகளை கட்ட, சிங்கப்பூர் அரசு திட்டமிட்டு உள்ளது. சிங்கப்பூர், தொழில் துறையில் முன்னேறிய நாடுகளில் ஒன்று. இந்நாட்டின் மக்கள் தொகை, இன்னும், 20 ஆண்டுகளில், 13 லட்சம்
அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள நெரிசலை சமாளிக்க, பூமிக்கடியில் குடியிருப்புகளை உருவாக்க, அந்நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளது. ஏற்கனவே, சிங்கப்பூரின் நிலப்பகுதியை விரிவாக்கும் முயற்சிகள், அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டன. கடலில் இருந்து எடுக்கப்பட்ட மணலை கொண்டு, நிலத்தை விரிவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனால், கடற்கரை பகுதிகளில், மணல் அரிப்பு ஏற்படுவதாக, அண்டை நாடுகள், எதிர்ப்பு தெரிவித்தன. எனவே புதிய முயற்சியாக, தற்போது பூமிக்கடியில், குடியிருப்புகளை உருவாக்க, நிலம் அளவிடும் பணி துவக்கப்பட்டு உள்ளது. "வரும், 2050க்குள் பூமிக்கடியில், குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களை உருவாக்க முடியும்' என, அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது. அறிவியல் பூங்கா இருக்கும் இடத்துக்கு கீழே, 80 முதல், 100 மீட்டர் ஆழத்தில், 30 மாடி கட்டடங்களை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த, சிங்கப்பூரின் வளர்ச்சி திட்ட அலுவலகமான, ஜூராங் டவுன் கார்ப்பரேஷன், முடிவெடுத்து உள்ளது.

எனினும், சிங்கப்பூரின் இத்திட்டத்துக்கு, அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தெற்கு சீன பகுதிகளில் இருந்து வந்து குடியேறியவர்களின் வாரிசுகளான சிங்கப்பூர் மக்கள், வெளிநாட்டினர் அதிக அளவில் சிங்கப்பூரில் குடியேறுவதால், தாங்கள் சிறுபான்மையினராக மாறிவருவதாக கவலை தெரிவித்து உள்ளனர். எனினும், "இந்த திட்டம் புதிது என்பதால் தான், மக்கள் எதிர்க்கின்றனர். இது சாத்தியமாகும் திட்டம் தான்' என, நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top