இந்தியாவில் மருமகளின் காதை கடித்து குதறிய மாமியார்
தேங்காயை, குப்பையில் போட்டதற்காக, உருவான சண்டையில், மருமகளின் காதை கடித்துக் குதறினார் மாமியார். பதிலுக்கு மாமியாரின் கைகளை உடைத்ததோடு, உதட்டையும் கடித்து பழி தீர்த்தார் மருமகள்.
கேரளா, கோட்டயம், கொல்லாட்டை சேர்ந்தவர் லால்ஜி, இவரின் மனைவி ரஜினி. இவர்களுடன், லால்ஜியின் தாய், சாந்தம்மாவும் வசித்து வருகிறார்.
நேற்று முன் தினம், லால்ஜி வெளியே போயிருந்தபோது, முற்றத்தில் விழுந்த தேங்காயை எடுத்து பார்த்தார் ரஜினி. கெட்டுப் போன, தேங்காய் என்பதால், அதை குப்பையில் வீசினார்.
இதை பார்த்து அங்கு வந்த மாமியார் சாந்தம்மா, "நல்ல தேங்காயை ஏன் குப்பையில் தூக்கி எறிந்தாய்´ என, கேட்டு, மருமகளிடம் வாக்குவாதம் செய்தார்.
இந்த வாக்குவாதம் முற்றி, கைகலப்பானது. திடீரென, மருமகளின் இடது காதை, கடித்து குதறினார் சாந்தம்மாவலியிலும், ஆத்திரத்திலும், அருகில் கிடந்த கம்பை எடுத்து, மாமியார் சாந்தம்மாவை தாக்கினார் ரஜினி.
அதை தடுக்க முயன்ற போது, மாமியாரின் இரு கைகளும் உடைந்தன. அதிலும், ஆத்திரம் தீராத ரஜினி, மாமியாரின் உதட்டையும் கடித்து, பழி தீர்த்தார். உடலில் ரத்தம் தோய்ந்த நிலையில், இருவரும் வீட்டுக்குள் சென்று படுத்துக் கொண்டனர்.
இவர்களின் சண்டையை பார்த்த, அக்கம் பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.
பொலிசார் விரைந்து வந்து, காயமடைந்த, மாமியாரையும், மருமகளையும், பொலிஸ் ஜீப்பில் ஏற்றி, மருத்துவமனையில் சேர்த்தனர். பொதுமக்கள் அளித்த புகாரின்படி, பொலிசார், இருவர் மீதும், வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக