பிரான்சில் பெற்ற குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்த தாய்
நேற்று காலை Lagny-sur-Marne (Seine-et-Marne) அருகிலிலுள்ள சிறு நகரமான Dampmart இலிருக்கும் தந்தை ஒருவர் தனது வீட்டிற்குத் திரும்பியபோது வீட்டிற்குள் அவரது மூன்று பிள்ளைகளும் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில்
கிடந்துள்ளனர். உடனடியாகத் தந்தை அவசர முதலுதவிச் சேவையினர்க்கும்
காவற்துறையினர்க்கும் அறிவித்துள்ளார். 45 வயதுடைய இவரின் மனைவி எங்கு என்று தெரியவில்லை. இவரை இப்போது காவற்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். முதற்கட்டத் தகவல்களின் படி இக் குடும்பத்திற்குள் சில காலமாகவே கணவணுக்கும் மனைவிக்கும் தொடர்ந்து சண்டைகள் வந்த்தாகவும் அவர்களுக்கள் ஒத்துப் போகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளின் தந்தை ஒரு O.R.L மருத்துவர். இவர் தனது சேவை முடிந்து பரிசிலிருந்து கிட்டத்தட்ட முப்பது கிலோமீற்றர்கள் தொலைவிலிருக்கும் Dampmartகிராமத்திலுள்ள தனது வீட்டிற்குக் காலை 7h15 அளவில் திரும்பியுள்ளார். 7h15 அளவில் தந்தையால் தகவல் வழங்கப்பட்டவுடன் அவசர முதலுதவிச் சேவைகள் அவ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.
அங்கு பிள்ளைள் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளனர். ஆனால் மரணத்தின் காரணம் இன்னமும் சட்டமருத்துவ ரீதியாக அறிவிக்கப்படவில்லை. முதலுதவிப்படையினர் அங்கு சென்றபோது முதலில் பதினொறு வயதுடைய மகளின் உடலத்தைக் கண்டெடுத்துள்ளனர். அதன் பின்னர் அவரது தம்பியான ஒன்பது வயதுச் சிறுவனின் உடலத்தைக் கண்டெடுத்தனர்.
இவர்கள் உடம்பில் பல வெட்டுக் காயங்கள் இருந்தன. இதன் பின்னர் 17 வயதுயைட மூத்த மகனைக் கண்டெடுத்தனர். அப்பொழுது அவர் உயிருடன் இருந்தார். இருப்பினும் சிறிது நேரத்தில் அவரும் சாவடைந்தார். அதிர்ச்சி நிலையிலுள்ள தந்தை மருத்துவசிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார். இந்த வீட்டின் பாதைகள் காவற்துறையினரால் போக்குவரத்திற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.
காவற்துறையினரின் தடயவியல் மற்றும் தொழில்நுட்பப்பிரிவினர் சம்பவ இடத்தை ஆராய்ந்து வருகின்றனர். காவற்துறையினரின் மோப்ப நாய்கள் கொண்டு வரப்பட்டு வீட்டின் அருகிலிருக்கும் தொடருந்துப் பாதை முழுவதுமாகச் சோதனையிடப்படுகின்றது. Versailles சட்டவியற் காவற்துறையினரிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தக் குடும்பம் பற்றி ஏற்கனவே 2007ம் ஆண்டில் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி வந்துள்ளது.
இவர்களின் இரு பிள்ளைகள் 2007ல் மிகவும் சிறு வயதில் அருகிலிருக்கும் தொடருந்துப் பாதையிலுள்ள குகை (tunnel de Chalifert (Seine-et-Marne).ஒன்றின் வாசலில் விளையாடிக்கொண்டிருந்த போது அங்கு மணிக்கு 140 கிலோமீற்றர் வேகத்தில் வந்த தொடருந்து ஒன்று நல்ல வேளையாகக் கரையோடு உரசிச் சென்றமையால் கொல்லப்படாமல் தப்பித்திருந்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக