புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மருத்துவச் செலவுக்கான கட்டணத்தை செலுத்தாமை காரணமாக 13 வயது சிறுமி ஒருவரை கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் நிர்வாகம் தடுத்து வைத்தமை தொடர்பில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் 45 வயதான குடும்பஸ்தர் ஒருவர், கொழும்பு நீதிவானிடம் சாட்சியமளித்துள்ளார்.

தமது மனைவியின் சுகவீனம் காரணம் 2012 ம் ஆண்டு குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளப்பட்டது.

எனினும் தமது மனைவிக்கு சிகிச்சையளித்த மருத்துவரின் கவனயீனம் காரணமாக, சுகவீனம் தீவிரமடையவே அவரை தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

எனினும் அவர் தேசிய வைத்தியசாலையில் பின்னர் மரணமானார்.

இந்தநிலையில் தனியார் வைத்தியசாலையில் இருந்து தேசிய வைத்தியசாலைக்கு மாற்றும் போது 10 லட்சம் ரூபாவை, மருத்துவச் செலவாக தனியார் வைத்தியசாலைக்கு செலுத்த வேண்டியிருந்தது.

எனினும் அதனை செலுத்தும் வரைக்கும் தமது 13 வயது மகளை தனியார் வைத்தியசாலை நிர்வாகம் அறை ஒன்றில் தடுத்து வைத்ததாக குறித்த சிறுமியின் தந்தை நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

இது குறித்து பெண்கள் சிறுமிகள் பாதுகாப்பு சபையிடம் முறையிட்ட போதும் அவர்கள் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதன்பின்னர் ஜனாதிபதிக்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமது மகள் கடிதம் எழுதியதை அடுத்தே முறைப்பாடு பெண்கள் சிறுமிகள் பாதுகாப்பு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக குடும்பஸ்தர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் வைத்தியாலைக்கும் தமது மனைவியின் மரணத்துக்கு காரணமான மருத்துவரையும் தண்டிக்குமாறு குடும்பஸ்தர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top