சீனாவில், பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்ட நாய், இறந்ததால், 75 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, அதன் எஜமானர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சீனாவின், ஷூன்யி மாவட்டத்தில், நாய்ப்பண்ணை வைத்திருக்கும் ஒருவர், "திபெத்தன் மஸ்டிப்´ என்ற உயர்வகை நாயை வளர்த்து வந்தார். சீனாவில் உள்ள செல்வந்தர்கள் வளர்க்கும், இந்த வகை நாய்கள், அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. தன் நாயின் தலை, அகலமாக இருப்பதால், அதன் அளவை குறைத்து, மேலும் கவர்ச்சிஆக மாற்ற நாயின் எஜமானர் திட்டமிட்டார்.
பிளாஸ்டிக் சர்ஜரிக்காக, அந்த நாய், கால்நடை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது, மயக்க மருந்து கொடுக்கப்பட்ட அந்த நாயின் இதயத் துடிப்பு திடீரென நின்று போனதால், அது உயிரிழந்தது.
இதை தொடர்ந்து, "நாய்க்கு அறுவை சிகிச்சை நடத்திய கால்நடை மருத்துவர், நஷ்ட ஈடாக, 75 லட்சம் ரூபாய் தர வேண்டும்´ என, அதன் எஜமானர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக