உதய்பூர் மாவட்டம், நவகர் பகுதியைச் சேர்ந்தவர் தேவ்நாத். இவர், அப்பகுதியிலுள்ள மந்திரவாதியான செங்கரா என்பவருடன் நட்பாக பழகி வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன், இவ்விருவரும் புதையல் இருக்கும் இடத்தை கண்டறிய, பல வித பூஜைகள் செய்தனர்.
அதில் பலன் இல்லாததால், மந்திரவாதி செங்கராவின் யோசனைப்படி, புதையல் இருக்கும் இடத்தை கண்டறிய, நரபலி கொடுக்க ஏற்பாடு செய்தார், தேவ்நாத்.
இதற்காக, தன் வயலில் வேலை பார்க்கும், தொழிலாளி ஒருவரை கொல்ல திட்டமிட்டார்.
ஆனால், அவர் நரபலி கொடுக்க திட்டமிட்ட அன்று இரவு, அந்த தொழிலாளி வேலைக்கு வரவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த தேவ்நாத், வேறு வழியின்றி, தன் சொந்த பேரன் பிரகலாத்தை வெட்டி நரபலி கொடுத்தார்.
சம்பவம் பற்றி அறிந்த பொலிசார், தேவ்நாத் மற்றும் மந்திரவாதி செங்கராவை கைது செய்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக