தன் மகனை சந்திக்க நீதிமன்றம் அனுமதி மறுத்ததால் பிரெஞ்சு பிரஜையொருவர் 40 மீற்றர் உயர கிரேனில் ஏறி, போராட்டம் நடத்தி வருகிறார்.
பிரான்சை சேர்ந்த செர்ஜி சார்னே(வயது 43) என்ற
இந்நபர் திருமணம் முடிந்து விவாகரத்தானவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், மாஜி மனைவியிடமிருந்த தன் மகனை இரண்டு மாதங்கள் சுற்றுலாவுக்கு அழைத்து சென்றிருந்தார்.
இந்நிலையில் மகனை ஒரு மாதம் வைத்திருக்க கொடுக்கப்பட்ட அவகாசத்தை மீறி கூடுதலாக அவகாசம் எடுத்து கொண்டதால் 4 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், மகனை சந்திக்கவும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் விரக்தியடைந்த செர்ஜி, பிரான்சில் உள்ள நான்டெஸ் நகரில் 40 மீற்றர் கிரேனில் கடந்த 15ம் திகதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்.
நீதிமன்றம் தன் முடிவை மறுபரீசலனை செய்ய வேண்டும், தந்தைகள் உரிமைக்காக போராடும் அமைப்பினரை பிரான்சு நீதி துறை அமைச்சர் சந்திக்கும் வரை கிரேனிலிருந்து இறங்கப் போவதில்லை என அவர் கூறியுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக