புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

வரலாறு படத்தில் பரதநாட்டிய கலைஞராக வந்த அஜித் குமார், விஸ்வரூபத்தில் கதக் நடன கலைஞராக வந்த கமல் ஹாசன் ஆகிய இருவரில் யாரிடம் அதிக நளினம் இருந்தது.


´தல´ அஜித் குமார் முதன்முறையாக பரதநாட்டிய கலைஞராக நடித்த படம் வரலாறு. அந்த படத்திற்காக அவர் ஸ்லிம்மாகி இருப்பார். மேலும் நீளமாக முடி வளர்த்து நடையில் ஒரு நளினத்தை கொண்டு வந்திருப்பார்.

பரதநாட்டியம் நன்கு தெரிந்த கமல் ஹாசன் விஸ்வரூபம் படத்தில் கதக் நடன கலைஞராக நடித்துள்ளார்.

அந்த படத்தில் அவரும் தலைமுடியை நீளமாக வளர்த்திருப்பார். மேலும் அவரின் நடை, பேச்சு ஆகியவற்றில் ஒரு நளினம் இருக்கும். விஸ்வரூபத்தில் கமலைப் பார்த்தவுடன் வரலாறு அஜித் தான் நினைவுக்கு வந்தார்.

கமல் நடிப்பில் மட்டுமல்ல டான்ஸிலும் சிறந்தவர். அவருக்கு ஆட கற்றுக்கொடுக்கவா வேண்டும். அவர் ஆடிய நாத வினோதங்கள் பாடலை இன்றும் யாராலும் மறக்க முடியாது.

கமலுடன் ஒப்பிடுகையில் அஜித் குமாரின் டான்ஸ் ஓகே தான். அதற்கு அவரது உடல்நிலையும் காரணம் என்று கூறலாம். அத்தனை அறுவை சிகிச்சை செய்த பிறகும் அவர் தன்னால் முடிந்த அளவுக்கு டான்ஸ் ஆடுகிறார்.

விஸ்வரூபம் படத்தில் கமல் தனது நடை, பேச்சு, முக பாவணை என நடனத்துக்கே உரிய பெண்மை மிளிர வந்திருப்பார். அதைப் பார்க்கையில் அடடா கமல் தானா இது என்ற ஆச்சரியம் வந்தது.

ஆனால் அவரைப் பார்க்கையில் ஏனோ வரலாறு அஜித்தின் முகம் ஞாபகத்திற்கு வந்தது. அஜித்தின் நளினமும், முக பாவணையும், மிடுக்கான நடையும் மனக்கண்ணில் வந்துபோனது.

ஒரு வேளை கமலைவிட அஜித்திடம் அதிக நளினம் இருந்ததோ என்று தோன்றியது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top